சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு நேர் மாறாக எடப்பாடி பழனிச்சாமி.. வெயிலில் காய்ந்து கருகி தீவிர பிரச்சாரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரச்சாரத்தில் ஜெயலலிதாவுக்கு மாற்று பாணியை கையாளும் எடப்பாடி பழனிச்சாமி- வீடியோ

    சென்னை: வேனில் குடை இல்லை... குடைக்கு மேல கூரை இல்லை.. சும்மா சொல்லக்கூடாது.. ரொம்பவும் எளிமையான முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார் நம் முதல்வர்!

    ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் பிரச்சார பாணியே வேறு மாதிரியாக உருவானது. சொகுசு வேனில் உட்கார்ந்தபடியே மைக்கில் பிரச்சாரம் செய்து வருவார் ஜெயலலிதா!

    இதற்கு காரணம் அவரது உடல்நிலை குறைபாடாக இருக்கலாம். அப்படியேதான் கருணாநிதியும் இறுதிகாலங்களில் பிரச்சாரம் செய்தார்! ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள், ஏன் உடல்நிலை நன்றாக இருப்பவர்கள்கூட பிரச்சாரத்தில் சொகுசைதான் விரும்புகிறார்கள்!

    ஓபன் வேன்

    ஓபன் வேன்

    இந்த விஷயத்தில் நம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் அவர் மேற்கொள்வது பொதுக்கூட்ட மேடை கிடையாது.. முழுக்க முழுக்க சாலை பயணம்தான்! அடுத்ததாக அவரது வேனில் நிழற்குடை கிடையாது. வெட்ட வெளியில், மண்டை பிளக்கும் வெயிலில் ஓபன் வேனிலேயே பிரச்சாரம் செய்கிறார். அறிமுக வேட்பாளர்களை போலவே ஓட்டு கேட்கிறார். இதில் வெயில் என்பது அவருக்கு சாதாரண விஷயம்!

    ஹாரன் அடித்து கொந்தளித்த மக்கள்.. அப்படிதான் பேசுவேன்.. என்ன சவுண்டு.. நடுரோட்டில் பிரேமலதா அடாவடிஹாரன் அடித்து கொந்தளித்த மக்கள்.. அப்படிதான் பேசுவேன்.. என்ன சவுண்டு.. நடுரோட்டில் பிரேமலதா அடாவடி

    குளுகுளு பிரச்சாரம்

    குளுகுளு பிரச்சாரம்

    அவர் நினைத்திருந்தால் குளுகுளு பிரச்சாரம் செய்திருக்க முடியும். அவரை யாரும் எதுவும் கேட்கவும் முடியாதுதான். இருந்தாலும் எந்த வெயிலுக்கும் முதல்வர் சளைத்தவர் இல்லை என்பது நிரூபணமாகி வருகிறது. மதிய நேரத்தில் ஒரு ஓய்வு தேவைப்படுகிறது. எந்த ஊரில் பிரச்சாரம் செய்கிறாரோ, அந்த இடத்திலேயே ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து தங்குகிறார்.

    ஹைடெக் மைக்

    ஹைடெக் மைக்

    மைக்கை கையில் பிடித்து பேசும்வரை கொஞ்சம் திணறினார். இப்போது காதில் ஹைடெக் மைக் இருப்பதால் கேஷூவலாக பேசுகிறார். ஆனால் சில சமயம் அவரது வார்த்தை தெளிவாக கேட்பதில்லை. குரல் கரகரவென கம்மி விடுகிறது. அதிகமாக கத்தி பேசுவதால் இப்படி தெரிகிறதா என தெரியவில்லை. ஆனால் முதல்வர் இப்படியெல்லாம் பேசக்கூடியவரா என்பது இந்த 2 வருஷமாக நமக்கு முழுசா தெரியவே இல்லை. என்னென்னமோ பேசுகிறார்.. பழமொழி சொல்கிறார்.. திருக்குறள் சொல்கிறார்.. திடீரென ஸ்டாலினை பத்தி பேச்சு வந்துவிட்டால் முகத்தில் டென்ஷன் தெரிகிறது.

    திண்டுக்கல் சீனிவாசன்

    திண்டுக்கல் சீனிவாசன்

    ஒட்டுமொத்தமாக எல்லாரையும் விமர்சித்துவிட்டு, கடைசியாக வேட்பாளர், சின்னம் சொல்லி ஓட்டு கேட்கும்போது ரொம்பவே உஷாராகி விடுகிறார். ஒருமுறை கையில் வைத்திருக்கும் நோட்டீஸ் அல்லது அங்கிருப்பவர்களை திரும்பி பார்த்து வேட்பாளர் பெயர், சின்னத்தை சரியாக சொல்கிறார். திண்டுக்கல் சீனிவாசன், பிரேமலதா போல் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வதில்லை.

    மன்சூரலிகான்

    மன்சூரலிகான்

    நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் போல ஆழமாக பேசி கை தட்டல்களை இவர் வாங்குவதில்லை.. மக்களோடு மக்களாக வீட்டு வேலைகளை இழுத்து போட்டு மன்சூரலிகான் போல இவர் மக்களை திசை திருப்பவில்லை.. ஆனால் எளிமையான பிரச்சாரத்தில் மக்களை ஈர்த்துள்ளார்!

    ஈர்க்கிறது

    ஈர்க்கிறது

    முதல்வராக இருந்தாலும் இப்படி எளிமை எதிர்பாராததுதான்.. "எல்லாம் ஓட்டு வாங்கறதுக்குதான்" என்று சொன்னாலும், இப்படி பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் முதல்வருக்கு தேவை கிடையாதுதான். அதனால் முதல்வரின் பிரச்சாரம் ஈர்க்கத்தக்கதாகவே உள்ளது!

    English summary
    TN CM Edapadi Palanisamy is campaigning without any luxury Van and People appreciate his simplicity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X