• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"கணக்கு" பார்த்து.. கரெக்ட்டாக காய் நகர்த்தும் எடப்பாடியார்.. விழிக்கும் பாஜக.. திகைக்கும் தேமுதிக!

|

சென்னை: எடப்பாடியார் இந்த முறை ஒரே கல்லில் 3 மாங்காய்களை அடித்துள்ளார்.. ஒவ்வொரு கல்லும் பாமக, பாஜக, தேமுதிக என 3 கட்சிகளை நோக்கி குறிபார்த்து விழுந்துள்ளது..!

  சென்னை: நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை: இழுபறியில் அதிமுக, பாஜக தொகுதி ஒதுக்கீடு!

  எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தேர்தலில் படுஇழுபறி அதிமுக கூட்டணிக்குள் நடந்தது.. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் ஒற்றைக்காலில் நின்றார்.. அதில் சாதித்துவிட்டார்.

  உண்மையை சொல்லபோனால் இதில் எடப்பாடியார்தான் வென்றார் என அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே இடஒதுக்கீடு விவகாரத்தை கிளப்பினார் ராமதாஸ்..

  உறுதி

  உறுதி

  ஒவ்வொரு முறை போராட்டத்தை முன்னெடுத்த போதும் கண்டுகொள்ளாத அதிமுக அரசு, ஒவ்வொரு முறை அமைச்சர்களை அனுப்பி கூட்டணியை உறுதி செய்ய முயற்சி செய்த அதிமுக அரசு, இடஒதுக்கீட்டு விஷயத்தில் மட்டும் வாய் திறக்கவில்லை. கடைசி நேரத்தில், கடைசி கூட்டத்தொடர் அன்று, கடைசி நிமிஷத்தில் மதியம் 3 மணிக்கு மேல், இடஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  பாமக

  பாமக

  இனி பாமக அதிமுகவை காரணம் காட்ட முடியாது.. வேறு எது சொல்லியும் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது.. அந்த வகையில் எடப்பாடியார், தன் தரப்பு பந்தை சரியாக பாமகவை நோக்கி வீசியுள்ளார்.. அதில் பாமகவும் விழுந்துவிட்டது.. கூட்டணி பேச்சுவார்த்தையும் சுபமாக முடிந்து விட்டது.

   வட தமிழகம்

  வட தமிழகம்

  23 சீட்களில் பாமக போட்டியிடுகிறது.. கும்மிடிப்பூண்டி, திருத்தணி, எழும்பூர், செங்கல்பட்டு, திருப்போரூர், சோளிங்கர், ஆற்காடு, ஓசூர், பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஆரணி, கலசப்பாக்கம், அணைக்கட்டு, திண்டிவனம், விக்கிரவாண்டி, சங்கராபுரம், மேட்டூர், வீரபாண்டி, குன்னம், ஜெயங்கொண்டம், பண்ருட்டி, நெய்வேலி, காட்டுமன்னார்கோயில் ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்த முறை வட தமிழகத்தில் மட்டுமே பாமக போட்டியிடும் என்கிறார்கள்.

  லிஸ்ட்

  லிஸ்ட்

  இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறதாம்.. கொங்கு மண்டலம், தென்மாவட்டங்களில் அதிமுக கவனம் செலுத்தினாலும், வடமாவட்டங்களை முழுவதுமாக பாமகவுக்கு ஒதுக்கிவிடுமா என்பது சந்தேகம்தானாம்.. வடமாவட்டங்களில் திமுக பலம்பொருந்தி இருக்கிறது.. சென்ற முறை எம்பி தேர்தலில் பாமக பெருவாரியான இடங்களில் மண்ணை கவ்வியதையும் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டி உள்ளது.. அதனால், மொத்த வடமாவட்டத்தையும் பாமகவுக்கு ஒதுக்கிவிடாமல், அதிமுகவின் பங்கையும் அங்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளதாக கூறப்படுகிறது.

   வன்னியர்கள்

  வன்னியர்கள்

  இதில் இன்னொரு விவகாரமும் கிளம்பி உள்ளது.. வன்னியர்கள் வாக்குகள் உள்ள வடமாவட்டங்களில் மட்டும் குறிவைத்து தொகுதிகளை கேட்டால், கூட்டணி கட்சிக்கு என்ன தான் லாபம்? என்று அதிமுகவினரே கேள்வி எழுப்புகிறார்கள்.. அதனால்தான், பாமக கொடுத்த லிஸ்ட்டில், பண்ருட்டி, தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம் ஆகிய 5 தொகுதிகள்மட்டும் கன்பார்ம் ஆகி இருக்கிறதாம்.. மிச்சமுள்ளவை இனிதான் பேசி உறுதியாகும் என தெரிகிறது.

   ஒர்க் அவுட்

  ஒர்க் அவுட்

  பாமகவுக்கு தரும் சீட், தொகுதிகள் போலவே தங்களுக்கும் வேண்டும் என்று பாஜக பிடிவாதம் பிடித்து வருவதால், அங்கேயும் இழுபறி நீடிக்கிறது.. ஆக மொத்தம், இடஒதுக்கீடு, சீட் எண்ணிக்கை, தொகுதிகள் விவகாரம் என எடப்பாடியார் போட்ட கணக்கு அத்தனையும் ஒர்க் அவுட் ஆகி வருகிறதாம்..!

  English summary
  CM Edapadi Palanisamys next level move in PMK Alliance
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X