சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

7.5% இடஒதுக்கீடு: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார்.. 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஆளுநரை முதல்வர் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று வரை ஒப்புதல் தராமல் இருந்தார்.. ஏற்கனவே கால தாமதம் ஆன நிலையில், மேலும் அதற்கான அவகாசம் கேட்டிருந்தார்.

CM Edapadi Planisamy meets Governor Banwarilal Purohit

ஆனால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டிருந்தது.. இதையடுத்து, ஆளுநர் மசோதாவுக்கு இன்று ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக இன்று மாலை 5.30 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை வந்தார்.

அரசியலா பண்றீங்க.. எங்க கிட்ட எடுபடாது.. 7.5% இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமலாகும்.. முதல்வர் அதிரடிஅரசியலா பண்றீங்க.. எங்க கிட்ட எடுபடாது.. 7.5% இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமலாகும்.. முதல்வர் அதிரடி

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அப்போது, அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஆளுநருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

ஆளுநர்- முதல்வர் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்... அதில், அரசு பள்ளி மாணவர்களின் கஷ்டத்தை உணர்ந்தவர் முதல்வர் பழனிசாமி .. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.. அதனாலேயே இந்த சந்திப்பு என்று கூறியுள்ளார்.

English summary
CM Edapadi Planisamy meets Governor Banwarilal Purohit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X