சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை.. முதல்வர் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நேற்று முன் தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் கேரள எல்லையில் தமிழக மாவட்டங்களில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித் துறை விடுமுறை அறிவித்தது.

கொரோனா வைரஸ்.. திருச்சியில் இருந்து செல்லும் விமான சேவைகளில் அதிரடி மாற்றம்.. சில சேவைகள் ரத்துகொரோனா வைரஸ்.. திருச்சியில் இருந்து செல்லும் விமான சேவைகளில் அதிரடி மாற்றம்.. சில சேவைகள் ரத்து

பள்ளிகளுக்கு

பள்ளிகளுக்கு

இதையடுத்து நேற்றைய தினம் அந்த விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் ஏற்கெனவே அறிவித்தப்படி விடுமுறையை உறுதி செய்தார். இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் தமிழகத்தில் அனைத்து மழலையர், தொடக்க பள்ளிகளுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

வணிக வளாகங்கள்

வணிக வளாகங்கள்

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம். மாநில எல்லைகளில் அமைந்துள்ள திரையரங்குகளை மூடவும் உத்தரவிடப்படுகிறது. மாநில எல்லைகளில் உள்ள வணிக வளாகங்களையும் மூட உத்தரவிடப்படுகிறது. தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, நெல்லை, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிபபேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்களை மார்ச் 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சோப்பு போட்டு

சோப்பு போட்டு

பொது இடங்களில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். பொது இடங்களுக்கு நோய்வாய்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள் செல்ல வேண்டாம். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினால் கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொடக் கூடாது. கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ஊடகங்கள்

ஊடகங்கள்

அத்துடன் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்அது போல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கையை இவர்கள் வருவாய் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வருவாய் நிர்வாகம் அந்த அறிக்கையை முதல்வர் மற்றும் அமைச்சருக்கு அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க சுகாதாரத் துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

English summary
CM Edappadi Palanisamy announces holiday for Kinder Garden and Primary schools ahead of Corona virus outbreak.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X