சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேற்றும் இன்றும் 2-2 லட்டுகள்.. நாளை என்ன?.. அடித்தட்டு மக்களின் மனதை தட்டி தூக்கும் எடப்பாடியார்!

Google Oneindia Tamil News

சென்னை: கல்லூரி, பள்ளி மாணவர்கள், விவசாயிகள், மகளிர், அரசு ஊழியர்கள் என பெரும்பாலான மக்களின் மனங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொள்ளை கொண்டுவிட்டார் என்றே சொல்லலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் இரு கட்சிகளும் மக்களுக்கு பயனுள்ள வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தெந்த திட்டங்களை செய்வோம் என ஸ்டாலின் கூறுகிறார்.

வேகம் எடுக்கும் மநீம.. பிரச்சாரத்தை துவக்கிய துணை தலைவர் மகேந்திரன்.. விறுவிறுப்பாகும் கோவைவேகம் எடுக்கும் மநீம.. பிரச்சாரத்தை துவக்கிய துணை தலைவர் மகேந்திரன்.. விறுவிறுப்பாகும் கோவை

அடுத்த ஆட்சி

அடுத்த ஆட்சி

ஆனால் எடப்பாடியோ அடுத்த ஆட்சியில் எதற்கு, நான் இப்போதே தள்ளுபடி செய்கிறேன் என கூறி விவசாய பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்களின் மனங்களை குளிர்விக்கும் வகையில் ஓய்வு பெறும் வயது 59-லிருந்து 60 ஆக உயர்த்தினார். அது போல் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி என அறிவித்துள்ளார்.

2ஜிபி டேட்டா

2ஜிபி டேட்டா

இதை கல்வியாளர்கள் பலர் எதிர்த்தாலும் மாணவர்கள் வரவேற்கிறார்கள். அது போல் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தையும் முதல்வர் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். அந்த வகையில் இன்றைய தினம் இரு லட்டான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மகளிர்

மகளிர்

ஒன்று விவசாயிகளுக்கானது மற்றொன்று மகளிருக்கானது. விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்து பாலை வார்த்த பழனிச்சாமி இன்றைய தினம் விவசாயிகள் 6 சவரன் நகையை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து பெற்ற நகைக் கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

அது போல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களையும் அவர் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். கல்லூரி, பள்ளி மாணவர்கள், விவசாயிகள், மகளிர், அரசு ஊழியர்கள் என பெரும்பாலான மக்களின் மனங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொள்ளை கொண்டுவிட்டார் என்றே சொல்லலாம்.

English summary
CM Edappadi Palanisamy annouces schemes which are for the welfare of the farmers, students, women, Government staffs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X