சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய கண்தான தினம்.. தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கண் தானத்தை ஊக்குவிக்க கண்தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் தேசிய கண்தான தினம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பெரிய அளவில் கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

CM Edappadi Palanisamy announces to donate his eyes

மரணத்திற்கு பிறகு கண்களை தானம் செய்ய மக்களை ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது போல் கண்களை தானம் செய்வதாக ஒருவர் உறுதி அளித்து எழுதி கொடுத்துவிட வேண்டும்.

பின்னர் அவர் இறந்த பிறகு, தகவலறிந்த சம்பந்தப்பட்ட அமைப்போ அரசோ அவரது கண்களை இறந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக தானமாக கொண்டு சென்று அதை பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருத்தப்படும்.

எல்லோரும் ரிக்ஷாவை எடுத்து ஓட்டிட்டா எல்லோரும் ரிக்ஷாவை எடுத்து ஓட்டிட்டா "ரிக்ஷாக்காரன்" ஆகிட முடியுமா.. ஆனாலும் ஆசைப்படுவது நியாயம்தானே

இந்த நிலையில் நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி, இன்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.

CM Edappadi Palanisamy announces to donate his eyes

இறந்த பின்னர் மண்ணோடு மண்ணாக செல்லும் கண்களை தானம் செய்தால் அவை பிறரின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் என்பதே மருத்துவர்கள், தன்னார்வலர்களின் விழிப்புணர்வு வாசகமாகும்.

English summary
CM Edappadi Palanisamy announces to donate his eyes as National Eye Donation day is observed tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X