சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரபரப்பு.. முதல்வரை வரவேற்றதில் சர்ச்சை.. தேவஸ்தானத்தில் என்ன நடந்தது.. வெடித்து கிளம்பிய விவகாரம்

திருப்பதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார்

Google Oneindia Tamil News

சென்னை: ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு சென்றிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை போலீஸ் அதிகாரியை முன்னிறுத்தி தேவஸ்தான நிர்வாகம் வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் - வீடியோ

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்..

    இதற்காக எடப்பாடியார் நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் காரில் திருமலைக்கு சென்றார்.. அவரை கூடுதல் எஸ்பி முனிராமய்யா, தேவஸ்தான அதிகாரி பிரபாகர்ரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம்

     மேளதாளங்கள்

    மேளதாளங்கள்

    மேள தாளங்கள் முழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது... அவருடன் அவரது மகள் மற்றும் மனைவி வந்திருந்தனர்... நேற்றிரவு திருமலையில் தங்கிய அவர், இன்று காலை ஏழுமலையானை வழிபட்டார்.இதில்தான் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

    அதிகாரி

    அதிகாரி

    முதல்வர் அங்கு சென்றதுமே, கூடுதல் எஸ்பிதான் வரவேற்றுள்ளார்.. ஆந்திராவை சேர்ந்த ஒரு எம்எல்ஏவிற்கு அளிக்கப்படும் மரியாதையை கூட, ஒரு மாநில முதல்வருக்கு அளிக்க தேவஸ்தானம் மறுத்து உள்ளதே, ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.. இத்தனைக்கும் தேவஸ்தான அதிகாரிகள் எல்லாருமே உள்ளூரில்தான் அந்த நேரத்தில் இருந்திருக்கிறார்கள்.

     முதல்வர்

    முதல்வர்

    இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி சொல்லும்போது, திருமலைக்கு வரும் மாநில முதல்வர்களை, தேவஸ்தான செயல் அதிகாரிகள் வரவேற்க வேண்டியது கட்டாயம்... தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பு குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சொல்லி உள்ளார். வேல் யாத்திரை சிறப்பாக நடக்க வேண்டும் என்று நேற்று எல்.முருகனும் திருப்பதிக்கு சென்று வழிபட்டார்..

    திருப்பதி

    திருப்பதி

    எனினும், பொதுவாக, அரசியல் கட்சிகளின் மாநில தலைவர்களை வரவேற்பதற்கு, திருமலை தேவஸ்தானத்தில் விதிமுறைகள் எதுவும் இல்லை என்கிறார்கள்.. கட்சிகளின் தலைவர்கள் வரும்போது, அவர்களுக்கு, தேவஸ்தானத்தின் சார்பில் வரவேற்பும் அளிக்கப்படாதாம். அதனால்தான், நேற்று முருகனுக்கும், தேவஸ்தானம் சார்பில், திருமலையில் நேற்று வரவேற்பு எதுவுமே அளிக்கப்படவில்லை என்று காரணம் சொல்கிறார்கள்.. ஆனால், ஒரு முதல்வரை ஒரு போலீஸ் அதிகாரியை கொண்டு வரவேற்றதுதான் விவகாரமாக வெடித்துள்ளது!

    English summary
    CM Edappadi Palanisamy darshan in Tirupati today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X