சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாதா மைக்கிலிருந்து ஹைடெக் மைக்கிற்கு மாறியது ஏன்?.. முதல்வர் எடப்பாடி விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹெச். ராஜாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம்- வீடியோ

    சென்னை: சாதா மைக்கிலிருந்து ஹைடெக் மைக்கிற்கு மாறியது ஏன் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்தார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்ய தொடங்கிய 3-ஆவது நாள் தருமபுரியில் அன்புமணி ராமதாஸை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதற்கு அடுத்த நாள் அவர் ஹைடெக் மைக்கில் பிரசாரம் செய்தார். முதல்வரின் இந்த "மாற்றமும், முன்னேற்றமும்" பெரும் கேள்வியை எழுப்பியது.

    ஜெ.,வின் ஆன்மாவிற்கு பயந்து.. நலத்திட்டங்களை கூடுதலாக செய்கிறோம்... ஓபிஎஸ் பேச்சு ஜெ.,வின் ஆன்மாவிற்கு பயந்து.. நலத்திட்டங்களை கூடுதலாக செய்கிறோம்... ஓபிஎஸ் பேச்சு

    தொற்றுநோய்

    தொற்றுநோய்

    இதுகுறித்து தமிழ் சேனல் ஒன்றுக்கு எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், எனக்கு கன் மைக்கில் பேசினால் நோய் தொற்று ஏற்பட்டு தொண்டையில் வலி ஏற்படுகிறது. மேலும் குரலும் வரவில்லை. அந்த இன்பெக்ஷன் என சொல்லக் கூடிய தொற்று இன்னும் எனக்கு சரியாகவில்லை.

    குரல்வலைகள்

    குரல்வலைகள்

    கன் மைக்கால் குரல் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. அந்த மைக்கில் பேசும் போது சப்தம் அதிகமாக இழுக்கிறது. இதனால் குரல்வலைகள் பாதிக்கப்பட்டுவிட்டன.

    மருத்துவர்கள்

    மருத்துவர்கள்

    அதனால் ஹைடெக் மைக்கை பயன்படுத்தினால் சப்தம் குறைவாக பேசினாலும் அதிகமாக கேட்கும் என்றனர். மேலும் கன் மைக்கில் பேசினால் எதிர்காலத்தில் பேச்சே வராது என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

    பாதிப்பு

    பாதிப்பு

    இதுவரை 157 கூட்டங்களில் பேசியுள்ளேன். அன்புமணியை ஆதரித்து பேசிய போது தொண்டை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற்றேன். கூடவே சிகிச்சையும் பெற்றேன். அதுமுதல்தான் இந்த மாற்றம் என்றார்.

    English summary
    CM Edappadi Palanisamy uses hitech mike in election campaign. He explained why he uses that mike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X