சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்!

அத்திவரதர் கல்வெட்டில் எடப்பாடியார் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    அத்திவரதரை இடமாற்றம் : ஆகம விதிமுறைகளை பின்பற்றப்படும்- வீடியோ

    சென்னை: மச்சக்கார முதல்வர்.. ஆமாம்.. நம்முடைய எடப்பாடியாரை இப்படிதான் நாம் பார்க்க வேண்டி உள்ளது. யாருக்குமே கிடைக்காத 2 விஷயங்கள் நம் முதல்வரை தானாக வந்து சேர்ந்துள்ளது.

    எத்தனையோ எதிர்ப்புகள், சர்ச்சைகள், தன் மீதான விமர்சனங்கள் போன்றவைகளை தாண்டி அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தார் எம்ஜிஆர்.

    தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். எம்ஜிஆரின் கருத்துக்கள், செயல்பாடுகள், கொள்கைகளை முன்னிறுத்தியே ஜெயலலிதா இக்கட்சியை மிகுந்த சவால்களுக்கு இடையே வழிநடத்தினார்.

    எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    அதனால்தான் லட்சோபலட்சம் தொண்டர்களை பெற்ற இந்த கட்சி தமிழகத்தில் இன்றுவரை முன்னணியில் வேரூன்றி திகழ்ந்து வருகிறது. எனினும், இக்கட்சி நிறுவன தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவினை முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முன்னின்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. 2017-ம் ஆண்டு, இந்த நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட எடப்பாடியார் மிகுந்த அக்கறை காட்டினார்.

    அழைப்பிதழ்

    அழைப்பிதழ்

    இதற்காகவே ஒரு குழு அமைத்தார். அந்த மாதம் முழுவதும் தமிழகம் முழுக்க கொண்டாட வேண்டும் என்று எண்ணினார். நூற்றாண்டு விழாவுக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில்கூட எதிர்க்கட்சித்தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பெயரை இடம் பெற செய்தார். விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை எடப்பாடியாருக்கே அமைந்தது.

    கல்வெட்டு

    கல்வெட்டு

    அதேபோல, அத்திவரதர் கல்வெட்டிலும் எடப்பாடியார் பெயர் இடம்பெற்றுள்ளது. 40 வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் தரக்கூடிய அத்திவரதர், தற்போது வந்து போயுள்ளார். கோடிக்கணக்கான மக்கள் நேரில் வந்து தரிசித்து சென்றனர். இந்த அத்திவரதர் வைபவ கல்வெட்டிலும் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இடம்பெற்றுள்ளதும் பெருமை வாய்ந்தவையாகவே கருதப்படுகிறது.

    முதல்வர்

    முதல்வர்

    அத்திவரதர் வைபவம் குறித்து ஒரு கல்வெட்டு, அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில்தான், எடப்பாடி பழனிசாமியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் வைக்கப்பட்ட கல்வெட்டுகளில் எந்த முதல்வர்களின் பெயர்களும் இடம்பெற்றதே கிடையாது.

    அத்திவரதர்

    அத்திவரதர்

    இப்படி ஒரு வாய்ப்பு எந்த முதல்வருக்கும் இவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காது. அந்த வகையில், முதல்வராக வந்த இரண்டே வருஷத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, அத்திவரதர் வைபவ கல்வெட்டில் பெயர் என வரலாற்று சிறப்பு வாய்ந்த 2 சம்பவத்தில் எடப்பாடியார் நின்றுவிட்டார். இதெல்லாம் ஒரு சம்பவம், நிகழ்வு என்று பார்த்தாலும், இன்னொரு பக்கம் அதிர்ஷ்டக்கார முதல்வர் என்றுகூட சொல்ல தோன்றுகிறது.

     வரலாறு முக்கியம் புருஷோத்தமரே!

    வரலாறு முக்கியம் புருஷோத்தமரே!

    இதில் என்ன சுவாரஸ்யம் என்றால்... அத்தி வரதர் வரலாற்றில் இடம் பெறுவதில் அத்தனை பேருக்குமே ஆர்வம் அதிகம்தான். இந்த கல்வெட்டை உருவாக்கிய கல்வெட்டு எழுத்தர் பி. வாசு தனது தந்தையின் பெயராான புருஷோத்தமன் என்ற பெயரை கூடவே பதித்ததில் இருந்தே அது தெரிகிறது. எப்படியோ அத்தி வரதர் வந்தாலும் வந்தார் அத்தனை பேரையும் கொள்ளை கொண்டு விட்டு இதயங்களை நனைத்து விட்டுப் போய் விட்டார் என்பது மட்டும் உண்மை.

    English summary
    Tamilnadu CM Edapadi Palanisamy name is in Kancheepuram Athi Varathar inscription
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X