சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இந்தியை திணிக்காதீர்.. திணிக்கும் முயற்சியை முறியடிப்போம்.. எடப்பாடி பழனிச்சாமி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இந்தியை திணிக்கக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இந்தியாவில் 73-ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3-ஆவது ஆண்டாக கொடியேற்றி வைத்தார். அவர் சுதந்திர தின உரையும் ஆற்றி வருகிறார்.

CM Edappadi Palanisamy says Hindi should not be imposed in TN

அவர் பேசுகையில் தமிழகத்தில் இந்தியை திணிக்கக் கூடாது. இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தியை திணிக்க எடுக்கப்படும் முயற்சியை முறியடிக்க உறுதியாக உள்ளோம்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ 15000- லிருந்து 16000ஆக உயர்த்தப்படுகிறது. சுதந்திர போராட்டத் தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ 7500-லிருந்து ரூ 8000-ஆக உயர்த்தப்படுகிறது.

CM Edappadi Palanisamy says Hindi should not be imposed in TN

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இதுவரை ஒரு கோடி பேர் தரிசனம் செய்துள்ளனர். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்றார் முதல்வர்.

English summary
CM Edappadi Palanisamy says in his Independence day speech that Hindi should not be imposed in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X