சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் 13 இடங்களில் மேம்பாலங்கள்.. முதல்வர்

Google Oneindia Tamil News

Recommended Video

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை : முதல்வர் உத்தரவு

    சென்னை: நடப்பாண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பில் சாலை பாதுகாப்பு பணிகளுக்கான திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் அறிவித்தார்.

    தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு பிறகு இன்று கூடியது. அப்போது நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றன.

    CM Edappadi Palanisamy says that 13 flyovers in Chennai will be built

    அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.

    மத்திய கைலாஷ், சேலையூர், மடிப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னை பெருநகர பகுதிகளில் பாலங்கள் அமைக்க ரூ 1, 122 கோடியில் நிலம் கையகப்படுத்தப்படும். 13 மேம்பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள், 2 நடை மேம்பாலங்கள், 1 ஆற்றுப் பாலம் ஆகியன அமைக்கப்படும்.

    இது லிஸ்ட்லயே இல்லையே.. திமுகவின் மாஸ்டர் பிளான்... அதிமுக கடும் அதிர்ச்சிஇது லிஸ்ட்லயே இல்லையே.. திமுகவின் மாஸ்டர் பிளான்... அதிமுக கடும் அதிர்ச்சி

    மெரினாவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். சென்னை டைடல் பார்க் சந்திப்பில் 2 "யு" வடிவ மேம்பாலங்கள் ரூ 110 கோடியில் கட்டப்படும். பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் சாலைகள் ரூ. 58.50 கோடியில் மேம்படுத்தப்படும்.

    சென்னை பெருநகர் பகுதியில் ரூ 299 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 மாவட்டங்களில் 32 இடங்களில் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். 17 மாவட்டங்களில் ரூ 155.80 கோடியில் 42 ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும்.

    1456 கி.மீ. நீள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்படும். பாடி குப்பத்தில் உயர்மட்டப் பாலம், கேந்திரி வித்யாலயா, தாம்பரத்தில் நடை மேம்பாலம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

    English summary
    CM Edappadi Palanisamy says that 13 flyovers in Chennai will be built. He says in demand of grants on National Highways.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X