சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. பெருவாரியான இடங்களில் போட்டி.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த 4 புலிக்குட்டிகள் மற்றும் 3 சிங்கக் குட்டிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் சூட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

CM Edappadi Palanisamy says that Civic polls will be conducted soon

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடும். வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதாகவே கருதுகிறோம். வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இதனால் உள்ளாட்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. செப்டம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.

51 நாடுகளின் தூதர்கள் புகழாரம்.. சுஷ்மா சுவராஜுக்கு.. கைப்பட எழுதிய இரங்கல் குறிப்புகள்! 51 நாடுகளின் தூதர்கள் புகழாரம்.. சுஷ்மா சுவராஜுக்கு.. கைப்பட எழுதிய இரங்கல் குறிப்புகள்!

இந்த நிலையில் முதல்வரின் கருத்து குறித்து கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில் தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சிக் காலம் முடியும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆளுங்கட்சி அச்சப்படுகிறது என்றார்.

English summary
CM Edappadi Palanisamy says that Civic polls will be conducted soon. We will contest in most of the wards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X