சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புது அமைச்சர்கள் நியமனமா.. ஆளுநரை முதல்வர் பழனிச்சாமி சந்தித்தது ஏன்?.. பரபரக்கும் அரசியல் களம்

தமிழக ஆளுநரை இன்று நேரில் சந்தித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    புது அமைச்சர்கள் நியமனமா.. ஆளுநரை முதல்வர் பழனிச்சாமி சந்தித்தது ஏன்?..

    சென்னை: நாளுக்கு நாள் சூடாகி வரும் அரசியல் பரபரப்பு நிகழ்வுகளுக்கு இடையே தமிழக ஆளுநரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.. அரை மணி நேரமே நடைபெற்ற சந்திப்பு இது என்றாலும் அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கி உள்ளது.

    ரஜினிக்கு விருது சர்ச்சை, திருவள்ளுவர் விவகாரம் என்று தமிழகத்தில் இன்றைய கள நிலவரம் பரபரப்பை தந்து வருகிறது. இந்த சூழலில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது.

    அதன்படி, கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலாலை இன்று மாலை சந்தித்து முதல்வர் பழனிசாமி பேசினார். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழக சட்டம் ஒழுங்கு, மற்றும் தற்போதைய அரசியல் நிலை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    சூடு பிடிக்கிறது.. ஸ்டாலின் ஸ்டைலில் களமிறங்கிய அதிமுக.. உள்ளாட்சி தேர்தலுக்காக திண்ணை பிரச்சாரம்!சூடு பிடிக்கிறது.. ஸ்டாலின் ஸ்டைலில் களமிறங்கிய அதிமுக.. உள்ளாட்சி தேர்தலுக்காக திண்ணை பிரச்சாரம்!

    பதட்டம்

    பதட்டம்

    எனினும், அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. சில அமைச்சர்கள் மத்தியில் தாங்கள் நீக்கப்படலாமா என்ற பதட்டம் நிலவி வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஆனால், வருகிற 6-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்க போகும் நிர்வாகிகள் கூட்டத்தில்தான் இதெல்லாம் முடிவாகும் என்றும் சொல்லப்படுகிறது.

    முன்னாள்கள்

    முன்னாள்கள்

    ஆளுநர் - முதல்வர் இந்த சந்திப்புக்கு என்ன காரணமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே எழ ஆரம்பித்தது. கட்சியில் சீட் கிடைக்காமலும், அமைச்சர் பதவி கிடைக்காமலும் சில முன்னாள்கள் பொருமிக் கொண்டுள்ளனர். மேலும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களையும், தவறு செய்யும் அமைச்சர்களையும் முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்ற வருத்தத்திலும் உள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    இப்படி அதிருப்தியானவர்களை சமாளிக்க எடப்பாடியார் முடிவு செய்துள்ளாராம். அப்போதுதான், நடக்க போகிற உள்ளாட்சித் தேர்தலில் விறுவிறுவென களமிறங்க முடியும் என்று நினைத்து, இதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யலாமா என்றும் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    அதிரடிகள்

    அதிரடிகள்

    அதாவது கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் அமைச்சர்களை மாற்றுவது அல்லது பொறுப்புகளை மாற்றி தருவது என சில அதிரடிகளையும் முதல்வர் எடுக்க உள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாகவே ஆளுநரை முதல்வர் சந்தித்தாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆளுநர் - முதல்வர் சந்திப்பு தொடர்பாக இதுவரை ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிடவில்லை. இரவில் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    tamilnadu cm edappadi palanisamys sudden meeting with governor panwarlal in rajbhavan guindy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X