சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேட்டியை மடிச்சி கட்டி.. "புயல் வேக" பயணம்.. ரெண்டே நாளில் தெறிக்க விடப்போகும் எடப்பாடியார்..!

நாகையில் முதல்வர் இன்று ஆய்வு செய்கிறார்

Google Oneindia Tamil News

சென்னை: புயலை விட வேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் புயல் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக முதல்வர் செல்கிறார்.

அளவுக்கு அதிகமான மழை வந்தாலும் சரி, லேசான புயல் வந்தாலும் சரி, இதில் பெருமளவு பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டம்தான்.. இதற்கு கடந்த கால புயல் பாதிப்புகளே சாட்சி.. இன்னும் இந்த மாவட்ட மக்களால் நிமிர முடியாத நிலையில், அடுத்தடுத்த இயற்கை சீற்றங்கள் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றன.

 CM Edappadi Palaniswami visits Cuddalore district today

இந்த மாவட்டத்தில் பெருமளவு விவசாயிகள்தான் உள்ளனர்.. இவர்களது கூரை வீடுகள் பறக்கின்றன.. விரிசல் விழுந்த வீடுகள் மழை, புயலால் தரைமட்டமாகிவிடுகின்றன.. அதனால், ஒவ்வொரு முறையும் மழை வரும்போதும் இந்தமாவட்டம் தண்ணீரில் தத்தளித்துவிடும்.

இந்த முறை அதுபோன்ற பாதிப்பு ஏற்படாத வகையில், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.. எனினும், கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இந்த மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை திரும்ப பல நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள்கள் பயணமாக கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.

காலை 11.30 மணிக்கு வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக கடலூர் புறப்பட்டு செல்கிறார்... கடந்த மாதம் 26-ம் தேதியும் நிவர் புயல் பாதிப்புகளை முதல்வர் பார்வையிட்டார்.. வேட்டியை மடித்து கொண்டு புயல் பாதித்த மக்களுடன் மக்களாக நின்று, அவர்களின் தேவை, குறைகளை கேட்டறிந்தார்.. இந்நிலையில், மறுபடியும் 2வது முறையாக இன்று கடலூர் செல்கிறார் முதல்வர்... இறுதியில் மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்...

 'கமிஷன் நாயகர்’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை நாயகர் பட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி 'கமிஷன் நாயகர்’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை நாயகர் பட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

மழை நீரை விரைவில் வெளியேற்றுவது மற்றும் மழை நீர் வெளியே செல்ல நிரந்தர மாற்று வழி குறித்து ஆலோசிப்பார் என தெரிகிறது. அதன்பிறகு, நாளை நாகையில் ஆய்வு செய்ய உள்ளார்.. இந்த இரு மாவட்டங்களிலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்குகிறார்.

இந்த புயல் சேதத்தை வைத்து, ஆளும் தரப்பை விமர்சிக்க எதிர்க்கட்சியினர் தயாராகி வரும் நிலையில், அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல், எடப்பாடியார் வேட்டியை மடித்து கொண்டு களமிறங்கி வருவதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
CM Edappadi Palaniswami visits Cuddalore district today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X