சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புயல் பாதித்த திருவாரூர், நாகைக்கு செல்கிறார் முதல்வர்.. இந்த முறை ரயிலில்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நாகை, திருவாரூரை வேறு ஒரு நாளில் ஆய்வு செய்வோம்- முதல்வர்-வீடியோ

    சென்னை: கஜா புயல் பாதித்த திருவாரூர், நாகை மாவட்டங்களை ஆய்வு செய்ய நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார்.

    கடந்த 16 ம் தேதி வீசிய கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். குடிசை வீடுகளில் வசித்து வந்தவர்கள், தங்குவதற்கு வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். இன்னும் மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    cm edappadipalanisamy visit to tiruvarur and nagai on wednesday

    இதனிடையே, கடந்த 20 ம் தேதி சென்னையில் இருந்து, விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் ஆய்வு செய்தார். இதனையடுத்து, தஞ்சை, நாகை செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக முதலமைச்சர் பழனிசாமி சென்னை திரும்பினார். ஹெலிகாப்டரில் முதலமைச்சர் ஆய்வு பணிகளை மேற்கொண்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்தநிலையில், புயல் பாதித்த 13 நாட்களுக்கு பிறகு நாளை மறுநாள் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக, நாளை இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகைக்கு செல்கிறார்.

    இந்த பின்னணியில், 7 பேர் கொண்ட மத்தியக் குழு ஆய்வு பணி இன்றுடன் நிறைவு செய்து கொண்டு, இந்த வார இறுதிக்குள் மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    English summary
    CM Edappadi Palanisamy is all set to visit Thiruvarur and Nagai on wednesday to inspect the Cyclone damages.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X