• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனா: நீட் உள்ளிட்ட தேசிய தேர்வுகளை நடத்துவது குறித்து பரிசீலிக்க மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவலுக்கு வழிவகுக்கக் கூடிய நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகள் நடத்துவதை பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கொரோனா தடுப்புப் பணிகளில் இருந்து தாங்கள் பெற்ற மேலான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்றைச் சமாளிக்கும் கடினமான பணியைப், புதிதாகப் பொறுப்பேற்ற ஓர் அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடுதான். எனது அரசு இச்சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளைக் குறைத்து, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

கொடைக்கானலில் இலவசமாக தங்கி சுற்றி பார்க்கலாம்.. 10ம் வகுப்பு பெயில் ஆனவர்களுக்கு சூப்பர் ஆஃபர்!கொடைக்கானலில் இலவசமாக தங்கி சுற்றி பார்க்கலாம்.. 10ம் வகுப்பு பெயில் ஆனவர்களுக்கு சூப்பர் ஆஃபர்!

ஆக்சிஜன் - நன்றி

ஆக்சிஜன் - நன்றி

தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியமைக்காக இந்திய அரசுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். தங்களது நேரடி தலையீட்டைக் கோரும் சில முக்கியமான விவகாரங்களை உங்கள் கனிவான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

தேவை 1 கோடி தடுப்பூசிகள்

தேவை 1 கோடி தடுப்பூசிகள்

தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை, எமது அரசு 6 விழுக்காட்டில் இருந்து முழுமையாகக் தவிர்த்துள்ளதுடன், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், எங்கள் மாநிலத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்கக் கோரியிருக்கிறேன். இந்த முக்கியமான பிரச்சினையில், நான் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.

தமிழகத்தை பின்பற்றி...

தமிழகத்தை பின்பற்றி...

இரண்டு கோடி குடும்பங்களுக்கு, இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணத் தொகையாக கொடுத்துள்ளோம். மேலும், 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் இந்தக் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம். ஒன்றிய அரசு முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு வழங்கும் கூடுதல் அரிசியை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதைப்போன்று, தகுதியுடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும் இத்திட்டத்தை ஒன்றிய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

3-ம் அலையை எதிர்கொள்ள உதவி

3-ம் அலையை எதிர்கொள்ள உதவி

அடுத்ததாக, தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கொரோனா தொடர்பான அனைத்துப் பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்றும் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதனைக் கனிவுடன் பரிசீலிக்கவும். மூன்றாம் அலை வரும் எனக் கூறப்படுகிற நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.

நீட் தேர்வுகள் வேண்டாம்

நீட் தேர்வுகள் வேண்டாம்

பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, பிரதமர் இம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். இப்பெருந்தொற்றைக் கையாள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறேன். இதில் இருந்து மீள, உங்களோடும் அனைத்து மாநிலங்களோடும் நாங்கள் துணை நிற்போம் இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

English summary
Tamilnadu Chief Minister M.K.Stalin has appealed to PM Modi Should reconisder to cancel the NEET Exams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X