சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரிப்போர்ட்டோடு வரும் அதிகாரிகள்.. பொங்கல் பரிசு சர்ச்சை.. முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக வைக்கப்பட்ட புகார்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய இருக்கிறார்.

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் விழா முடிந்தும் இந்த பரிசு தொகுப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பில் மொத்தம் 20 பொருட்கள் அடங்கி இருந்தது. கரும்பு, ஏலக்காய், பாசிப்பருப்பு, மிளகு, புளி, நெய், வெல்லம், முந்திரி, திராட்சை, கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, பச்சரிசி, முழு கரும்பு, ரவை, கோதுமை மாவு, உளுத்தம் பருப்பு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு குளறுபடி புகார் பற்றி ரிப்போர்ட் கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. நாளையே அவசர மீட்டிங்பொங்கல் பரிசு குளறுபடி புகார் பற்றி ரிப்போர்ட் கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. நாளையே அவசர மீட்டிங்

மக்கள் விமர்சனம்

மக்கள் விமர்சனம்

இந்த பரிசு தொகுப்பிற்கு தொடக்கத்தில் மக்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால் போக போக இந்த பரிசுப்பொருட்கள் குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதாவது இந்த பரிசுப்பொருட்கள் தரமற்று இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. புளியில் பல்லி இருந்ததாக பரபரப்பு புகார் வைக்கப்பட்டது. அதேபோல், மிளகில் கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாகவும், மஞ்சள் தூள், மிளகாய் தூளில் பவுடர் கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

கலப்படம்

கலப்படம்

இது தொடர்பான வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பொங்கல் முடிந்த பின்பும் இந்த பரிசு பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு முன்பாக சிலருக்கு இந்த பரிசு பொருட்கள் வழங்க முடியாமல் போய்விட்டது. அவர்களுக்கும் பொங்கலுக்கு பின்பாக பரிசு பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்போதும் இந்த பொருட்களின் தரம் குறித்து இணையத்தில் பலர் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பு தரம்

பொங்கல் பரிசு தொகுப்பு தரம்

பொங்கல் பரிசு தொகுப்பு தரம் மோசமாக இருக்கிறது என்று கூறி பலர் இணையத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர் புகார்களை தொடர்ந்து நேரடியாக களத்திற்கே சென்று ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார். ஆனால் இப்போதும் பலர் பொங்கல் பரிசு பொருட்கள் குறித்த விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக வைக்கப்பட்ட புகார்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய இருக்கிறார்.

Recommended Video

    பொங்கல் பரிசு தொகுப்பு குளறுபடியை மறைக்க அன்பழகன் வீட்டில் ரெய்டு - எடப்பாடி பழனிசாமி
    இன்று ஆலோசனை

    இன்று ஆலோசனை

    சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடக்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்த அதிகாரிகள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ரிப்போர்ட்டோட அதிகாரிகள் இன்று மீட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இந்த மீட்டிங்கில் கலந்து கொள்கிறார். பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்படும்.

    English summary
    CM M K Stalin to meet officials today to discuss Pongal Gift Package issues and complaints.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X