சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேம்ப் எப்படி இருக்கு? முன்னறிவிப்பின்றி காரில் வந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. திகைத்த அதிகாரிகள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் மாபெரும் வேக்சின் முகாம் நடந்து வரும் நிலையில் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திடீரென வேக்சின் கேம்ப் ஒன்றில் விசிட் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று வேக்சின் முகாம் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுக்க மொத்தம் 20 ஆயிரம் வேக்சின் முகாம்கள் அமைக்கப்பட்டு வேக்சின் போடப்பட்டு வருகிறது. இன்று 15 லட்சம் பேருக்கு வேக்சின் போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த தடுப்பூசி முகாம்கள் மாலை 7 மணி வரையிலும் செயல்பட உள்ளது. சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு வேக்சின் போடப்படும் பணிகள் நடந்து வருகின்றன. மக்கள் காலையில் இருந்து ஆர்வமாக வேக்சின் போட்டு வருகிறார்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள்.. யாருக்கு கிடைக்கும்?தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள்.. யாருக்கு கிடைக்கும்?

வேக்சின்

வேக்சின்

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டில் இதேபோல் மாபெரும் வேக்சின் முகாம் நடத்தப்பட்டது. அப்போது 40 ஆயிரம் முகாம்களில் வேக்சின் போடப்பட்டது. ஒரே நாளில் 29 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டு புதிய ரெக்கார்ட் படைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் தமிழ்நாடு முழுக்க மாபெரும் அளவில் வேக்சின் முகாம் நடத்தப்பட்டு மக்களுக்கு வேக்சின் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநிலம் தற்போது வேக்சின் போடுவதில் வேகம் காட்டி வருகிறது.

 எத்தனை

எத்தனை


வேக்சின் கையிருப்பு இன்னும் கொஞ்சம் அதிகம் இருந்தால் தினமும் 10 லட்சம் பேருக்கு வேக்சின் போடும் கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4,21,11,412 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 3,31,17,092 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 89,94,320 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இன்று இதுவரை 6,67,197 வேக்சின் போடப்பட்டுள்ளது.

வேக்சின் முகாம்

வேக்சின் முகாம்

இந்த நிலையில் இன்று வேக்சின் முகாம் நடக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதை நேரில் பார்வையிட்டார். சென்னையில் சைதாப்பேட்டை அருகே தடாக நகர் சமுதாயக்கூடத்தில் முகாமிற்கு முன் அறிவிப்பின்றி முதல்வர் ஸ்டாலின் வருகை புரிந்தார். காரில் வந்தவர், நேரடியாக முகாமிற்கு உள்ளே சென்று அங்கு வேக்சின் போட வந்தவர்களை பார்த்து விசாரித்தார். கேம்ப் எப்படி இருக்கு.. எல்லா வசதியும் இருக்கா? என்று கேட்டார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அதன்பின் உள்ளே சென்று வேக்சின் செலுத்திய ஊழியர்களை பாராட்டினார். உங்களின் உழைப்பிற்கு நன்றி. கடந்த முறை மெகா கேம்ப்பில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள் என்று பாராட்டினார். பின்னர் வேக்சின் செலுத்துவிட்டு அங்கிருந்து சென்ற மக்களிடம் தனிப்பட்ட முறையில் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். உங்களுக்கு நன்றி.. வேக்சின் போட்டுக்கொண்டு அரசின் கொரோனா தடுப்பு பணியில் பங்கு எடுத்ததற்கு நன்றி என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.

பாராட்டு

பாராட்டு

திடீரென முதல்வர் ஸ்டாலின் தடுப்பூசி முகாமிற்கு வந்ததை அங்கிருந்த நிர்வாகிகள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. முதல்வரை பார்த்ததும் அங்கிருந்த நிர்வாகிகள் அரண்டு போய் எழுந்து நின்றனர். கடந்த முறை மெகா கேம்ப் பெரிய அளவில் வெற்றிபெற்றது. இந்த நிலையில் இதே போன்ற வேக்சின் முகாம்களை வாராவாரம் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
CM M K Stalin visited a vaccine camp Chennai Saidapet during Tamilnadu mass vaccination day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X