சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அதுக்குள்ளயா".. கியரை மாற்றும் ஸ்டாலின்.. ஆரம்பமே அசத்தல்.. அடுத்தடுத்து மாற்றங்கள்.. செம ஸ்பீடு

முதல்வர் ஸ்டாலினின் அரசு வேகம் எடுத்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஆரம்பமே அசத்தலாக இருக்கிறதே.. இனி அடுத்தடுத்த அதிரடிகள் எப்படி இருக்க போகிறதோ என்ற மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி...!

Recommended Video

    ஆரம்பமே அதிரடி.. தொகுதியில் கறார் கட்டிய Udhayanidhi Stalin

    தமிழகத்தில் அளவுக்கு அதிகமான நெருக்கடி சூழ்ந்த நிலையில்தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.. ஒரு பக்கம் மாநில அளவிலான உரிமைகளை மத்திய அரசு மறுத்து வருகிறது.. மற்றொரு பக்கம் கொரோனா பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.

    சி.டி.ஸ்கேனுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்.. கட்டணத்தை அரசே நிர்ணயிக்க கோரிக்கை..! சி.டி.ஸ்கேனுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்.. கட்டணத்தை அரசே நிர்ணயிக்க கோரிக்கை..!

    மத்திய - மாநில அளவிலான பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கும், நிர்ப்பந்தத்துக்கும் திமுக அரசு ஆளாகி உள்ளது.. இதை ஸ்டாலின் எப்படி கையாள போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம், பிரச்சாரத்தின்போது அறிவித்திருந்த பல்வேறு திட்டங்களை எப்படி, எப்போது அறிவிக்க போகிறார் என்ற ஆவலும் எகிறியது.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    ஆட்சிக்கு வந்ததுமே 2 ஆயிரம் கோடி என்று அறிவித்ததுமே அனைவரும் வாயடைத்து போய்விட்டனர்.. ஆவின் பால் ரூ.3 ஆக குறைக்கப்பட்டதும், அடுத்த கொஞ்ச நேரத்தில் உற்பத்தி செய்பவர்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தியதும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.. இதனால் வாங்குபவர் & விற்பவர் என இரண்டு தரப்புமே லாபம் அடையலாம்.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    நகர பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தது வரவேற்பை பெற்றாலும், ஒயிட் போர்டு என்று மட்டும் சொன்னது சில விமர்சனங்களுக்கும் உள்ளானது.. காரணம், பெரும்பாலான கிராமப்புறங்களில் தனியார் பேருந்துகள்தான் அதிகம்.. எனவே, தனியார் பஸ், டீலக்ஸ் பஸ்களுக்கும் இந்த உத்தரவை ஸ்டாலின் பிறப்பித்திருக்கலாமே என்று சொல்லப்பட்டது.

    டிஆர் பாலு மகன்

    டிஆர் பாலு மகன்

    அதேபோல அமைச்சரவையும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.. வாரிசுகளுக்கு அவ்வளவாக சீட் தரப்படவில்லை.. ஐ பெரியசாமி மகன், டிஆர் பாலு மகன், உட்பட எழிலன் வரை அபாரமாக பெற்றி பெற்றம் அமைச்சர் பதவி தரப்படவில்லை.. ஆனால், முன்னாள் அமைச்சர்களின் மகன்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல்ராஜன் மகன் போன்றோருக்கு தரப்பட்டிருக்கிறது.. காரணம், இவர்களின் அப்பாக்கள் இறந்துவிட்டார்கள். அந்த வகையில் பாசிட்டிவ் அணுகுமுறையே ஸ்டாலின் கையாண்டு வருகிறார்.

    உத்தரவுகள்

    உத்தரவுகள்

    மற்றொரு பக்கம், அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாய்மொழியாகவே சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.. வரம்பு மீறி செயல்படக்கூடாது என்றும், அவ்வாறு ஏதாவது புகார் வந்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்ற தொனியில் அறிவுறுத்தி இருந்தார்.. ஸ்டாலினின் பேச்சை ஏற்று அமைச்சர்கள் அவரவர் தொகுதிகளில் அதிரடிகளை காட்டி வருகிறார்கள்.

    அதிரடி

    அதிரடி

    இப்போது அமைச்சர்களை தாண்டி, அதிகாரிகளும் இதே போன்ற அதிரடிகளை செயல்படுத்த தொடங்கி உள்ளனர்.. இதற்கு உதாரணம்தான், தமிழக தலைமைச் செயலாளாராக பொறுப்பேற்றுள்ள இறையன்பு வெளியிட்ட அறிக்கை ஆகும்.. இதற்கு காரணம், வெளிப்படையான நிர்வாகம் தேவை என்று அதிகாரிகளிடமும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதுதானாம். அதிகாரிகளை தேர்வு செய்யப்பட்டபோதே, உங்களை முழுமையாக நம்புகிறேன்... எந்த அமைச்சர்கள் அழுத்தங்கள் தந்தாலும் அதற்கு இடம் தரக்கூடாது என்று கறாராக சொல்லிவிட்டாராம்.

    செயலாளர்கள்

    செயலாளர்கள்

    இந்நிலையில் அடுத்த தகவல் என்னவென்றால், உயர்மட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டது போலவே, துறை சார்ந்த செயலாளர்களும் ஏராளமானோர் மாற்றப்பட இருக்கிறார்களாம்.. அதற்கான உத்தரவும் கூடிய சீக்கிரம் வெளிவரும் என்கிறார்கள்.. ஸ்டாலினின் இந்த நடவடிக்கைகளை பார்த்து எதிர்க்கட்சிகள் அப்படியே வாயடைத்து போய் உள்ளது. எப்படியும் திமுக தரப்பில் ஏதாவது சிக்கல், பிரச்சனை எழும்.. அதை வைத்து அரசியல் செய்யலாம், அதிமுக தரப்பு கணக்கு போட்டு வந்த நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்து வருகிறார் ஸ்டாலின்.

    செயலாளர்கள்

    செயலாளர்கள்

    இதற்கு முன்பு திமுக ஆட்சியில் அப்படி இல்லை.. அமைச்சர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை ஏக அதிகாரம் பெற்றிருந்தனர்.. இவர்களுக்கு கட்டுப்பட்டுதான் அரசு செயல்பட்டு வந்தது.. ஆனால் இப்போது முழு அதிகாரமே அரசு உயர் அதிகாரிகளிடம் தரப்பட்டுள்ளது.. இறையன்பு ஒரு தனி அறிக்கையே விடுக்கிறார் என்றால் அதற்கு இதுதான் காரணம்.. அதுமட்டுமல்ல, எந்த அமைச்சராக இருந்தாலும், அதிகாரிகளை மீறி எதிலும் கையெழுத்துகூட போட முடியாதாம்..

    ஜெ.பாணி

    ஜெ.பாணி

    இது அப்படியே ஜெ.பாணி அரசியல் ஆகும்.. அதனால்தான் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் திணறி கொண்டிருந்தார்கள்.. அதிலும் புகாருக்கு ஆளாகியிருந்த அமைச்சர்களுக்கு, பொழுது விடிந்தால் அமைச்சர் பதவியே காணாமல் போயிருக்கும்.. அந்த அளவுக்கு அதிகாரிகளின் செல்வாக்கு கூடியிருந்தது.. இப்போது அப்படி ஒரு கடிவாளத்தை கையில் இறுக்கமாக வைத்துள்ளார் ஸ்டாலின்..

    மாற்றம்

    மாற்றம்

    அமைச்சர்களில் யாராவது சற்று சறுக்கினாலும் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால், கடுமையும் & கறார்தன்மையும் மாறி மாறி காட்டி வருகிறார்.. அதேசமயம் அரசியல் நாகரீகமும் தழைத்தோங்கி வருகிறது.. இதே பாணியில் ஸ்டாலின் ஆட்சி செய்தால், அரசு இயந்திரம் நிச்சயம் தமிழக மக்களுக்காக சுற்றி சுற்றி சுழலும் என்றே நம்பப்படுகிறது..!

    English summary
    CM MK Stalin and freedom given to gov officers
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X