சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனித் தமிழகம் வெல்லும்...பேஸ்புக், ட்விட்டர் முகப்பு பக்கத்தின் முகத்தை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக பதவியேற்றுக்கொண்ட உடன் அவரது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் முகப்பு பக்கங்களில் இனித் தமிழகம் வெல்லும் என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக பதவியேற்றுக்கொண்ட உடன் அவரது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் முகப்பு பக்கங்களில் உள்ள புகைப்படங்களை மாற்றி உள்ளார். இனித் தமிழகம் வெல்லும் என்ற வாசகத்துடன், மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பின்னணியில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய மக்கள் நலப் பணிகள் தொடர்பான புகைப்படத் தொகுப்பு உள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. இனித் தமிழகம் வெல்லும்! அதை நாளைய தமிழகம் சொல்லும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார் மு.க ஸ்டாலின்.

CM MK Stalin Facebook twitter face change Ini Thamilagam Vellum

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து 33 தமிழக அமைச்சர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

தலைமைச் செயலகம் சென்ற மு.க ஸ்டாலின் ஐந்து முக்கிய பைல்களில் கையெழுத்து போட்டார். தமிழக முதல்வராக பதவியேற்ற உடன் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர், பேஸ்புக் பக்கத்தில் முகப்புப் பக்கம் தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனித் தமிழகம் வெல்லும் எனவும் முகப்புப் பக்கத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி வைத்துள்ளார். பின்னணியில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய மக்கள் நலப் பணிகள் தொடர்பான புகைப்படத் தொகுப்பு உள்ளது.

English summary
Following the inauguration of MK Stalin as Chief Minister, a photo with the caption "Tamil Nadu will win" appeared on his Twitter and Facebook homepages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X