சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாச்சு.. வெளிநாடு போக போகிறாராமே ஸ்டாலின்.. உண்மையா.. டூ இன் ஒன் பிளான்?.. செம திட்டம்!

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு போக போவதாக தகவல்கள் கசிகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு செல்ல திட்டமிட்டு வருகிறாராம்.. இதுதான் தற்போதைய அரசியலில் ஹாட் நியூஸாகி வருகிறது.

ஆட்சிக்கு வந்த இந்த 2 மாத காலமாகவே திமுக தரப்பு படுபிஸியாக கொரோனா தடுப்பு விவகாரங்களை தீவிரமாக கையிலெடுத்து வந்தது.. மற்றொரு புறம், தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் முனைப்பு காட்டி வந்தது.

தற்போது தொற்று மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும், 3வது அலை பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.. அதனால் அதற்கான தடுப்பு முன்னெடுப்புகளிலும் தமிழக அரசு மும்முரமாகி வருகிறது.

இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பது நியாயமல்ல : ராமதாஸ்இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பது நியாயமல்ல : ராமதாஸ்

 கூட்டம்

கூட்டம்

இதற்கு நடுவில் 2 முறை முதல்வர் ஸ்டாலினும் டெல்லி சென்று திரும்பி உள்ளார்.. விரைவில் பட்ஜெட் கூட்டம் நடக்க உள்ளது.. வாக்குறுதியில் தந்த பல அறிவிப்புகளை நிறைவேற்றும் முயற்சியிலும் திமுக அரசு இறங்கி உள்ளது.. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படியும் மிக முக்கியமான 3 மெகா அறிவிப்புகள் வெளியாக கூடும் என்று பரபரக்கப்படுகிறது.

 சிகிச்சை

சிகிச்சை

அரசியல் களம் இந்த அளவுக்கு தகித்து கிடக்கும் நிலையில்தான், முதல்வர் ஸ்டாலின் திடீரென வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கசிந்து வருகின்றன.. குறிப்பாக லண்டன் செல்ல உள்ளதாக சொல்கிறார்கள்.. ஏற்கனவே, தன்னுடைய சிகிச்சைக்காகவும், குடும்பத்துடன் ஓய்வெடுக்கவும் லண்டன் சென்றிருக்கிறார்.. ஆனால், இந்த முறை அரசியல் பயணமாக செல்ல உள்ளதாக சொல்கிறார்கள்.

 லண்டன்

லண்டன்

லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காகவும் ஸ்டாலின் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. எனினும், தற்போது 3வது அலை அனைத்து நாடுகளிலும் தலைதூக்க தொடங்கி உள்ள சூழலில், இந்த பயணம் உடனே நடக்குமா? அல்லது தள்ளி போடப்படுமா என்று தெரியவில்லை.

 லண்டன்

லண்டன்

ஆனால், கடந்த மாதமே இதுபோன்றே ஒரு செய்தி வந்தது.. ஸ்டாலின் லண்டன் பயணத்துக்காக அனுமதி கோரப்பட்டிருந்ததாகவும், அதற்கான பயண அனுமதியும் கிடைத்துவிட்டதாக கூறப்பட்டது.. இப்போது மீண்டும் லண்டன் செல்வதாக தகவல்கள் வருகின்றன.. இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு தேவையான நலன்கள் மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அப்படியே தன்னுடைய சிகிச்சையையும் முதல்வர், வெளிநாட்டிலேயே முடித்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. பார்ப்போம்..!

English summary
CM MK Stalin goes to foreign soon, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X