சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி கூட்டம் கூடினால் அவ்வளவுதான்.. தமிழக அரசு போட்ட அதிரடி அடுத்த உத்தரவு.. அதிகாரிகள் தீவிரம்..!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா 3வது அலை பரவ தொடங்கி உள்ள சூழலில், ஆரம்ப கட்டத்திலேயே உறுதியான நடவடிக்கை வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் கவனமாக உள்ளார். இதன்படி தமிழகத்தில் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களை கண்காணித்து அந்த பகுதிகளை உடனே மூட வேண்டும் என்று மாவட்டஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி 31.7.2021 முதல் 9.08.2021 காலை 6 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அப்டி போடு.. திமுகவில் திடீர் மாற்றமா.. மொத்தம் 20 பேர்.. கூடும் மவுசு.. பின்னணியில் கனிமொழியா?அப்டி போடு.. திமுகவில் திடீர் மாற்றமா.. மொத்தம் 20 பேர்.. கூடும் மவுசு.. பின்னணியில் கனிமொழியா?

ஸ்டாலின் உத்தரவு

ஸ்டாலின் உத்தரவு

சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள்/மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம் என்று முதல்வர் ஸ்டாலின் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

9 இடங்கள் மூடல்

9 இடங்கள் மூடல்

இதன்படியே கூட்டம் அதிகமாக காணப்படும் சென்னை திநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 9 பகுதிகளில் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது ரங்கநாதன் தெரு வடக்கு உஸ்மான் சாலைமுதல் மாம்பலம் ரயில் நிலையம் வரையிலும், புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரையிலும், திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரையிலும், ஃபக்கி சாஹிப் தெரு முதல் அபிபுல்லா தெரு வரையிலும், புலிபோன் பஜார், என்.எஸ்.சி போஸ் சாலை, குறளகம் முதல் தங்க சாலை சந்திப்பு வரை , ராயபுரம் மார்க்கெட் அமைந்தகரை மார்க்கெட் பகுதிகள், கொத்தவால்சாவடி மார்க்கெட், ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதிகளை உடனடியாக அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த பகுதிகள் திறக்கப்படாது.

கடைகள் மூடப்படலாம்

கடைகள் மூடப்படலாம்

மேலே சொன்ன பகுதிகள் அனைத்தும் சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகள் ஆகும். கொரோனா பரவலை தடுக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையைப் போல் கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, வேலூர் உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பஜார்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் பொருட்களை வாங்கினாலோ இந்த பகுதிகளும் அடைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கூட்டம் கூடக்கூடாது

கூட்டம் கூடக்கூடாது

ஏனெனில் அரசு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்களே மூடுவது குறித்து முடிவெடுக்கலாம் என்று அறிவித்துள்ளதால், மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்த கடைகள் அதிகம் உள்ள பகுதிகளை மூட உத்தரவு போடும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil
    எண்ணிக்கை அதிகரிப்பு

    எண்ணிக்கை அதிகரிப்பு

    கொரோனா தொற்று சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயர தொடங்கி உள்ளது. எனவே ஆரம்ப கட்டத்திலேயே 3வது அலையை தடுக்க அரசு விரும்புகிறது. கூட்டம் கூடுவதை தடுப்பது. முககவசம் அணிவதை கடுமையாக அமல்படுத்துவது, மக்கள் வெளியில் அவசியம் இன்றி செல்வதை தடுப்பது இவை தான் கொரோனாவை தடுக்க உள்ள வழிகள் ஆகும்.

    மக்களே கவனம்

    மக்களே கவனம்

    தடுப்பூசி போடும் பணிகளை விரைவுப்படுத்துவதும் 3வது அலை பாதிப்பை குறைக்க முடியும் என்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. இந்தியாவில் 3வது அலை பரவ தொடங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது . கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகாவில் படிப்படியாக கொரோனா அதிகரித்து வருவதே இதற்கு சாட்சியாகும். மக்கள் அடுத்த 3 வாரங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

    English summary
    With the Corona 3rd wave beginning to spread, Chief Minister Stalin is careful to take decisive action t an early stage. Accordingly, Chief Minister Stalin has instructed the District collector, Police and Municipal Officers to monitor the crowded places in Tamil Nadu and close those areas immediately.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X