சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. விடிவு காலம் பிறக்கிறது.. நெரிசலை தவிர்க்க அரசு அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை : வடிவேலுவின் காமெடியான வரும் ஆனால் வராது என்ற காமெடி வேளச்சேரி மேம்பாலத்திற்கு பொருந்தும். 2016ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இரண்டு அடுக்கு மேம்பால பணிகள் நடைபெற்றது. அடுத்த மாதம் இதன் ஒரு அடுக்கு மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    Velachery Twin Flyover-க்கு விடிவு காலம் | Oneindia Tamil

    வேளச்சேரி, விஜயநகர் பஸ் நிலையம் அருகே, தாம்பரம், தரமணி, கிண்டி ஆகிய இடங்களுக்கு செல்லும் நான்கு முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் விஸ்வரூபம்: பெய்ஜிங் உட்பட 15 நகரங்களில் பாதிப்பு கிடுகிடு உயர்வு சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் விஸ்வரூபம்: பெய்ஜிங் உட்பட 15 நகரங்களில் பாதிப்பு கிடுகிடு உயர்வு

    ஏனெனில் விஜயநகர் பஸ் நிலையத்திற்கு, தாம்பரம், பொன்மார், கேளம்பாக்கம், மேடவாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாநகர பஸ்கள் செல்கின்றன. இந்த சந்திப்பை தாண்டி, தினமும், ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் த ஐடி நிறுவனங்களுக்கு செல்கின்றன. தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வேளச்சேரி விஜயநகர்

    வேளச்சேரி விஜயநகர்

    தாம்பரத்தில் இருந்து, பள்ளிக்கரணை கைவேலி வரை, வாகனங்கள் செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால், வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து விஜயநகர் வரையிலும், காலையிலும், மாலையிலும் கடும் நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

    இரண்டு அடுக்கு மேம்பாலம்

    இரண்டு அடுக்கு மேம்பாலம்

    இந்த நெரிசலை தடுக்கவே இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட கடந்த 2012ல் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. ஆனால் பணிகள் வேகம் பெறவில்லை. 2016ல் தான் பணிகள் வேகம் பெற்றன. 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அடுத்தடுத்து பணிகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடந்து வந்தது. ஆனால் மந்த கதியிலேயே நடந்து வந்தது.

    பணிகள் விரைவு

    பணிகள் விரைவு

    இந்நிலையில் அடுத்த மாதம் இரண்டு அடுக்கு மேம்பாலத்தின் ஒரு அடுக்கு மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு அடுத்த மாதம் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
    சென்னையில் அமைந்துள்ள முதல் இரண்டு அடுக்கு மேம்பாலம் இதுதான். தரமணி சாலையில் இருந்து வேளச்சேரி விரைவு சாலை வரை 36 தூண்கள் அமைத்து கட்டப்படுகிறது.இதன் மையப்பகுதி 50 அடி உயரம் உள்ளது.

    தாமதம் ஏன்

    தாமதம் ஏன்

    இதேபோல் தாம்பரம் சாலையில் இருந்து விரைவு சாலை வரை 17 தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதன் மையப்பகுதி 25 அடி உயரம் உள்ளது. இரண்டு ஆண்டுகளில் பணிகள் முடிய வேண்டிய நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு குழாய் மாற்றி அமைப்பது போன்ற பணிகளால் மேம்பாலம் அமைக்கும் பணி தாமதம் ஆனது. நிலம் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பயன் அளிக்காததால் கால தாமதம் ஏற்பட்டது.

    திறக்கப்படும் பாலம்

    பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு பின் கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்11997 சதுர அடி பரப்பளவு இடம் கையக்கப்படுத்தப்பட்டது. சட்டசபை தேர்தலுக்கு பின் தரமணி வேளச்சேரி சாலையை திறக்க முடிவு செய்யப்பட்டது. பணிகளும் வேகம் எடுத்தன. இந்நிலையில் கொரோனா காரணமாக பணிகள் தாமதம் ஆனாலும், ஒரு வழித்தடத்தை அடுத்த மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைவார்கள்.

    English summary
    One level of the double decker flyover at the velachery Vijayanagar junction in Velachery being constructed at a cost of ₹108 crore is nearing completion. CM mk stalin likly openOne level of the double decker flyover.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X