சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பார்த்தீங்களா.. குனியலை.. வளையலை.. ஸ்ட்ரெயிட்டா சொல்லிட்டார்.. அதுதான் ஸ்டாலின்..!

முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியிடம், முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்துள்ளர்.. அரசுமுறை பயணம், அரசு சம்பந்தப்பட்ட இது செய்தி என்றாலும், இந்த சந்திப்பின்போது வெளியான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் எப்படி இருக்க போகிறது? இந்த 3 நாளில் என்னவெல்லாம் அதிரடிகள் நடக்க போகிறது என்ற ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடம் எழுந்துள்ளது.

ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

இதற்கு காரணம், இந்த் 2 மாத காலமாக நடந்து வரும் திமுக ஆட்சிதான்.. ஆரம்பத்தில், "ஆன்ட்டி மோடி" என்ற ரீதியில் ஸ்டாலினின் பல நடவடிக்கைகள் பார்க்கப்பட்டன.

 பல்ஸ்

பல்ஸ்

அது ஜிஎஸ்டி சம்பந்தமாக 12 மாநில முதல்வர்களுக்கும் லெட்டர் எழுதியதாகட்டும், இலவச தடுப்பூசி, நீட் பிரச்சனைகளுக்கு கடிதம் எழுதியதாகட்டும், அனைத்திலுமே ஸ்டாலினின் பல்ஸ் அறிய முடிகிறது. அதாவது மாநிலங்கள் எந்தெந்த விஷயங்களில் சம்பந்தப்பட்டுள்ளதோ, அந்த பிரச்சனைகள் தொடர்பாக தன்னிடம் ஒருங்கிணைத்து கொண்டு, மத்திய அரசுக்கு வலியுறுத்தும் போக்கைதான் ஸ்டாலின் நடத்தி வருகிறார்..

 ஸ்டாலின்

ஸ்டாலின்

இன்னும் ஓபனாக சொல்லப்போனால், மத்திய அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, அதன்மூலம் தன்னை தேசிய லெவலுக்கு உயர்த்தும் முயற்சியாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது. அதேசமயம், மத்திய அரசை பகைத்து கொள்ளும் எண்ணமும் திமுகவுக்கு இல்லை.. அப்படி பகைத்து கொண்டும், இங்கு மாநிலத்தில் அரசியல் செய்ய முடியாது.. அதனால் அனுசரிக்கும் போக்கையும் கையாள வேண்டி உள்ளது..

 டெல்லி

டெல்லி

அரசியல் நாகரீகத்துக்கு முன்னுதாரணமாக திமுக அரசு திகழ்ந்து வரும் நிலையில், மத்திய அரசை அணுசரனையுடன் அணுகுவது என்பது அதற்கு சுலபமான விஷயமே. அதைதான் நேற்று டெல்லியில் பார்க்க முடிந்தது.. இப்போதைக்கு தமிழ்நாட்டுக்கு நிறைய தேவைகள் உள்ளன.. கடந்த காலங்களில் நமக்கு வந்து சேர வேண்டிய நலன்களே இன்னும் வரவில்லை..

 கோரிக்கைகள்

கோரிக்கைகள்

அதையும் சேர்த்து, இப்போதைய தேவைகளையும் கேட்டு பெற வேண்டி உள்ள கட்டாயம் திமுகவுக்கு உள்ளது.. நேற்று முன்தினம் இங்கிருந்து கிளம்பும் போதே கையில், நிறைய கோரிக்கைகளுடன்தான் டெல்லியில் போய் இறங்கினார். கொரோனா தடுப்பூசி, ஜிஎஸ்டி நிலுவை தவிர திருக்குறள் தேசிய நூல், மீண்டும் சேது சமுத்திர திட்டம், கோவைக்கு புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, குடியுரிமைச் சட்டம் திரும்பப் பெறுதல், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல்‌ போன்ற கொள்கை சார்ந்த விஷயங்களையும் வலியுறுத்தி உள்ளார்.

 அணுகும்முறை

அணுகும்முறை

கோரிக்கைகளை பிரதமரிடம் ஸ்டாலின் தருவது சம்பந்தமான போட்டோக்களும் வெளியாகின.. இதில் பலரும் சுட்டிக்காட்டுவது, ஸ்டாலினின் அணுகுமுறையைதான். நேரடியாக மாநிலத்துக்கு என்ன வேண்டுமோ அதை பொலைட்டாக சொல்லி விட்டார் முதல்வர் ஸ்டாலின். கெஞ்சலை, கொஞ்சலை.. எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு இதெல்லாம் தேவை என்று தெளிவாக பட்டியல் போட்டு பிரதமரிடம் கூறி விட்டார்.

போட்டோக்கள்

போட்டோக்கள்

அதை விட முக்கியமாக யாரை போலவும், குனியவும் இல்லை.. வளையவும் இல்லை.. கூழை கும்பிடு போடவும் இல்லை.. நெஞ்சை நிமிர்த்தி வணக்கம் வைத்து, தன் மாநிலத்தின் கோரிக்கைகளை பிரதமரிடம் நேரடியாக ஸ்டாலின் தந்துள்ளார்.. இதில் மரியாதை கலந்த ஸ்நேக உணர்வு தெரிகிறது... ஒரு வணக்க உணர்வு வந்து போகிறது..

 தேசிய தலைவர்

தேசிய தலைவர்

பிரதமர் மோடியிடம் இதுவரை இப்படி இதற்கு முன்பு யாரும் கோரிக்கைகளை தந்ததாக போட்டோக்கள் வெளிவந்ததில்லை... இந்நிலையில், இன்று திமுக அலுவலக கட்டிடம் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டுள்ளார்... சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் சந்திக்கிறார்... கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்திக்க போகிறார்.. ஆக மொத்தம் ஒரு தேசிய தலைவராக ஸ்டாலின் உயரும் ‌தருணம் இது...!

English summary
CM MK Stalin met with PM Modi and photos are viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X