சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 நாளில் 15 கொலைகள்.. எங்கே செல்கிறது தமிழகம்?.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பி.எஸ் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 10 நாட்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம், ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்‌ கூறியுள்ளார்.

Recommended Video

    ஒரே நாள் இரவில்... தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது... ஆயுதங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி வேட்டை!

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒரு மாநிலம்‌ வளர்ச்சி‌ பெற வேண்டுமெனில்‌, அந்த மாநிலத்தின்‌ மக்கள்‌ வளம்‌ பெற வேண்டுமெனில்‌, மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ வளர்ச்சி அடைய வேண்டும்‌.

    மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ வளர்ச்சி அடைவதற்கு மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதி, சிறப்பான கல்வி, சிறந்த ஆரோக்கியம்‌ எனப் பல்வேறு காரணிகள்‌ இருந்தாலும்‌, இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான காரணியாக விளங்குவது அமைதியான சூழல்‌.

    தாம்பரம் ரயில் நிலையத்தில் மாணவி குத்திக்கொலை..கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி- என்ன நடந்தது?தாம்பரம் ரயில் நிலையத்தில் மாணவி குத்திக்கொலை..கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி- என்ன நடந்தது?

    பொருளாதார வளர்ச்சி முக்கியம்

    பொருளாதார வளர்ச்சி முக்கியம்

    சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்‌, ஒரு மாநிலத்தில்‌ பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்‌, அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்‌.மாறாக, சட்டம்‌- ஒழுங்குப்‌ பிரச்சினைகளால்‌ பொது அமைதிக்குக் குந்தகம்‌ ஏற்படும்‌ மாநிலங்களில்‌ பொருளாதார வளர்ச்சிக்கு இடம்‌ இருக்காது. ஏனெனில்‌, அமைதி குன்றிய மாநிலங்களில்‌ தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும்‌, புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கும்‌ தொழில்‌முனைவோர்கள்‌ முன்வரமாட்டார்கள்‌ என்பதோடு, அந்த மாநிலத்தில்‌ உள்ள மக்களும்‌ தங்களைத்‌ காத்துக்‌ கொள்வதிலேயே நேரத்தைச் செலவிடவேண்டிய சூழல்‌ ஏற்படுமே தவிர, பொருளாதாரத்தை மேம்படுத்தும்‌ நடவடிக்கைகளில்‌ தங்களை ஈடுபடுத்திக்‌ கொள்ள இயலாது.

    தொடர் கொலைகள்

    தொடர் கொலைகள்

    தமிழ்நாட்டைப்‌ பொறுத்தவரையில்‌, சட்டம்‌-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள்‌ ஒருபுறம்‌ எடுக்கப்பட்டு வந்தாலும்‌, கொரோனா தொற்று நோய்‌ பாதிப்பு ஓரளவு கட்டுக்குள்‌ இருப்பதையடுத்து, பொருளாதார வளர்ச்சி தொடங்கி இருக்கின்ற இந்த நேரத்தில்‌, கடந்த பத்து நாட்களாக ஆங்காங்கே அன்றாடம்‌ கொலைக்‌ குற்றங்கள்‌ நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

    வாணியம்பாடி கொலை

    வாணியம்பாடி கொலை

    வாணியம்பாடியில்‌ மனிதநேய ஜனநாயகக்‌ கட்சியின்‌ மாநிலச்‌ செயலாளரும்‌, சமூக ஆர்வலருமான வசீம்‌ அக்ரம்‌ நடுரோட்டில்‌ வெட்டிக்‌ கொலை; திமுக முன்னாள்‌ மாநிலங்களவை உறுப்பினரின்‌ பேரன்‌ வெட்டிக் கொலை; சேலம்‌ மாவட்டம்‌, ஆத்தூரைச்‌ சேர்ந்த காட்டுராஜா மற்றும்‌ அவரது மனைவி காசியம்மாள்‌ எரித்துக்‌ கொலை; நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌ இருக்கை கிராமத்தைச்‌ சேர்ந்த முபாரக்‌ கழுத்தை அறுத்துக்‌ கொலை; கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ எருக்கம்பட்டு மலை கிராமத்தைச்‌ சேர்ந்த ராஜா கடத்திக்‌ கொலை; திருநெல்வேலி மாவட்டம்‌, கீழச்செவலைச் சேர்ந்த சங்கரசுப்ரமணியன்‌ தலை துண்டித்துக் கொலை; திருநெல்வேலி மாவட்டம்‌, கோபாலசமுத்திரம்‌ அருகே மாரியப்பன்‌ என்பவர்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார்.

    பாஜக‌ பிரமுகர்

    பாஜக‌ பிரமுகர்

    ராணிப்பேட்டை மாவட்டம்‌, தப்பூர்‌ கோவிந்தாங்கல்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த ரங்கநாதன்‌ கட்டையால்‌ தாக்கிக் கொலை; விழுப்புரம்‌ மாவட்டம்‌, காரணை கிராமத்தைச்‌ சேர்ந்த லட்சுமி படுகொலை; சிவகங்கை அருகே கல்லுப்பட்டியைச்‌ சேர்ந்த பாஜக‌ பிரமுகர் முத்துபாண்டி வெட்டிக்‌ கொலை; திருவண்ணாமலை மாவட்டம்‌, வீரானந்தல்லை சேர்ந்த வெங்கடேசன்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார்.

    திண்டுக்கல்‌

    திண்டுக்கல்‌

    கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சீலேப்பள்ளியைச்‌ சேர்ந்த விவசாயி வெங்கடப்பன்‌ அரிவாளால்‌ வெட்டிக்‌ கொலை; கடலூர்‌ மாவட்டம்‌, குப்பங்குளத்தைச்‌ சேர்ந்த காந்திமதி வெட்டிக்‌ கொலை; கடலூர்‌ மாவட்டம்‌, மேல்மாம்பட்டுவைச் சேர்ந்த கோவிந்தராசு மர்ம மரணம்‌; தேவகோட்டை ஒன்றிய பாஜக பொதுச்‌ செயலாளர்‌ கதிரவன்‌ வெட்டிக்‌ கொலை என எண்ணற்ற கொலைகள்‌ வரிசையில்‌, நேற்று திண்டுக்கல்‌, இ.பி. காலனியைச்‌ சேர்ந்த நிர்மலா பட்டப்பகலில்‌ வெட்டிக்‌ கொலை செய்யப்பட்டார்.

    கடும் கண்டனம்

    கடும் கண்டனம்

    இதுபோன்ற மனிதாபிமானமற்ற கொடூரச்‌ சம்பவங்களுக்கு எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இது மட்டுமல்லாமல்‌, சட்டம்‌- ஒழுங்கை நிலை நாட்டும்‌ பணியில்‌ ஈடுபட்டுக்‌ கொண்டிருக்கும்‌ காவல்‌துறையினரையே திருப்பித்‌ தாக்கும்‌ சம்பவங்களும்‌ ஆங்காங்கே நடைபெற்று இருக்கின்றன. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள்‌ தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிச்சயம்‌ பாதிக்கும்‌ என்பதில்‌ எள்ளளவும்‌ சந்தேகம்‌ இல்லை.

    முதல்வருக்கு அட்வைஸ்

    முதல்வருக்கு அட்வைஸ்

    எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கும்‌ அமைதியான சூழலை உருவாக்கிடும்‌ வகையில்‌, முதல்வர்‌ சட்டம்‌ - ஒழுங்கு பிரச்சினையில்‌ தனி கவனம்‌ செலுத்தி, சட்டம்‌- ஒழுங்கைச் சீரழிக்கும்‌ முயற்சிகளில்‌ ஈடுபடுவோரை இரும்புக்‌ கரம்‌ கொண்டு அடக்கவும்‌, கொலைக்‌ குற்றங்களில்‌ ஈடுபடுவோரை சட்டத்தின் முன்‌ நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்‌ தரவும்‌ அதிகாரிகளுக்குத் தக்க அறிவுரைகள்‌ வழங்குமாறு கேட்டுக்‌கொள்கிறேன். இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

    English summary
    AIADMK coordinator O. Panneerselvam has said that the Chief Minister MK Stalin should pay attention to law and order as more than 15 murders have taken place in Tamil Nadu in 10 days alone
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X