சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நீங்க இப்படியெல்லாம் செய்யாதீங்க".. முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்த நபரால் பரபரப்பு.. என்னாச்சு?

: காலில் விழுந்தவரை தடுத்து நிறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: தலைமை செயலகத்தில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கும் போது காலில் விழுந்தவரை தடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.

பொதுவாக தலைவர்களை சந்திக்க சென்றாலோ, அல்லது பதவிஏற்பு, பொறுப்பு ஏற்பு என முக்கிய நிகழ்வுகள் நடந்தால், தொண்டர்கள் திடீரென உணர்ச்சிவசப்பட்டுவிடுவர்..

வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு! வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

தலைமைக்கு தங்கள் நன்றியை தெரிவிக்கும் வகையில் காலில் விழுந்து வணங்கும் சம்பிரதாயங்கள் நடப்பது வழக்கம்.. ஜெயலலிதா இருந்தபோது, இது இயல்பாகவே நடந்து வந்தது..

 கலாச்சாரம்

கலாச்சாரம்

காலில் விழும் கலாச்சாரம் என்ற வார்த்தைகள் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிகமாக பயன்படுத்தப்பட்டது... அன்றைய அதிமுக அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஜெயலலிதாவிடம் கடைசிவரை காலில் விழுந்து வணங்குவதை ஒரு கட்டாய சம்பிரதாயமாகவே கொண்டிருந்தனர். காலில் விழுந்து வணங்குவது இல்லையென்றால், அது ஒரு மரியாதை குறைவானதாகவே அதிமுக மேலிடத்தால் பார்க்கப்பட்டது.

 கருணாநிதி

கருணாநிதி

ஆனால் திமுகவில் அப்படி இல்லை.. மறைந்த முதல்வர் கருணாநிதியும் இதே கொள்கையுடன்தான் இருந்தார்.. அவரைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு யாராவது காலில் விழுந்தாலும், உடனே அவர் தடுத்துவிடுவார்.. யார் காலிலும் விழக்கூடாது என்று கண்டிப்புடன் சொல்வார்... திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றிருந்தபோது ஒரு அறிக்கை வெளியானது..

வணக்கம்

வணக்கம்

அந்த அறிக்கையில், "திமுக தலைவர் முக ஸ்டாலினின் காலில் விழ எத்தனித்து அவருக்கு மன சங்கடத்தை ஏற்படுவத்துவதை தொண்டர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்... அவருக்கு வணக்கம் செலுத்தி வாழ்த்து தெரிவிப்பதே, திமுக போற்றி வரும் பண்பாட்டுக்கு பெருமை சேர்க்கும்" என கூறப்பட்டிருந்தது.. அதாவது, சுயமரியாதையை கொள்கையாக பின்பற்றுபவர்கள் இதை விரும்புவதில்லை, இந்த சடங்குகளின் மீதும் பெரிதாக நம்பிக்கையை வெளிப்படுத்துவதுமில்லை..

Recommended Video

    CM Stalin Park Walk | இன்னும் எப்படி Youngஆ இருக்கீங்க | CM with Public
    கம்பீரம்

    கம்பீரம்

    சமீபத்தில் திமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவும் இப்படித்தான் நடந்தது.. யாரும் யார் காலிலும் விழும் சடங்குகள் அன்றைய பதவியேற்பு விழாவில் காண முடியவில்லை... ஆளுநர் முன்பு பதவி ஏற்றுக் கொள்ள அமைச்சர்கள் மேடைக்கு வந்தபோது, முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஸ்டாலினை பார்த்து கம்பீரமாக ஒரு வணக்கம் மட்டுமே சொன்னார்கள்.. ஒருசிலர் பொன்னாடையை கையில் தந்து நன்றி சொன்னார்கள்.. மற்றபடி ஸ்டாலின் காலில் விழவில்லை..

    தொண்டர்

    தொண்டர்

    ஆனால், இன்றைய தினம் ஒருவர், முதல்வர் ஸ்டாலின் காலில் விழ போனார்.. தலைமை செயலகத்தில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கி கொண்டிருந்தார்.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ், ஆயிரத்து 597 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட உதவிகளை காணொளி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்... இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..

    அறிவுரை

    அறிவுரை

    நிகழ்ச்சியில் பிறகு வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.. இறுதியில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்... அப்போது ஒருவர் நலத்திட்ட உதவியை பெற வந்தார்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்தார்.. ஆனால், முதல்வர் அந்த நபரை உடனடியாக தடுத்து நிறுத்தி, இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

    English summary
    CM MK Stalin stopped DMK Cader from falling to his feet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X