• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வந்திருப்பது ஸ்டாலின்.. யாருக்கும் சொல்லாமல்.. முதல்வர் திடீர் விசிட்.. பரபரத்த ரேஷன் கடை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள நியாயவிலை கடை ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

  ரேஷன் கடைக்கு திடீரென சென்ற முதல்வர் Stalin மற்றும் Udhayanidhi Stalin .. பரபரத்த Royapettah

  மக்களுக்கு உரிய வகையில் 14 வகை மளிகை பொருட்கள் சென்று சேர்கிறதா, 2000 ரூபாய் நிவாரணத் தொகை சரியாக கொடுக்கப்படுகிறதா என்பதை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

  கொரோனா ஊரடங்கு காலத்தில் நிவாரணத் தொகையாக அரசு சார்பில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் ஒரு தவணையாக 2000 ரூபாய் கடந்த மாதம் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டது.

  3ஆம் பாலினத்தவருக்கு.. கொரோனா நிவாரண தொகை வழங்குவது குறித்து பரிசீலனை.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்3ஆம் பாலினத்தவருக்கு.. கொரோனா நிவாரண தொகை வழங்குவது குறித்து பரிசீலனை.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

  தரமாக இருக்கிறதா

  தரமாக இருக்கிறதா

  நேற்று முதல் நியாயவிலைக் கடைகள் மூலமாக இரண்டாவது தவணை 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த மளிகை பொருட்கள் தரமானதாக இருக்கிறதா, உரிய வகையில் பணம் சென்று சேர்கிறதா என்பதை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்தார். இதன்படி இன்று சென்னை ராயப்பேட்டை அமுதம் நியாயவிலை கடைக்கு திடீரென அவர் விசிட் அடித்தார்.

  ஊடகங்களுக்குச் சொல்லவில்லை

  ஊடகங்களுக்குச் சொல்லவில்லை

  அவர் செல்வது முன்கூட்டியே ஊடகத்தினருக்கு தெரியப்படுத்தப்படவில்லை. முதல்வரின் கார் எங்கோ கிளம்பி செல்வதை அறிந்து கொண்டு முதல்வர் இல்லத்துக்கு வெளியே இருந்த பத்திரிகையாளர்கள் அவரை பின்தொடர்ந்து சென்ற போதுதான் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு நடத்துவது தெரியவந்தது. ரேஷன் கடையில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் போதிய அளவு மளிகை சரக்குகள் இருப்பு இருக்கிறதா என்பது பற்றியும் ஊழியர்கள் வந்துள்ளனரா என்பதை பற்றியும் நேரில் பார்த்து உறுதி செய்தனர். மேலும் அங்கு வந்திருந்த பொதுமக்கள் சிலருக்கு தங்கள் கைகளால் நிவாரணப் பொருட்களையும் பணத்தையும் வழங்கி கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.

  பரபரப்பான ரேஷன் கடை

  பரபரப்பான ரேஷன் கடை

  முதல்வர் இவ்வாறு திடீரென விசிட் செய்ததால் ரேஷன் கடை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. ஊழியர்கள் பரபரப்புடன் வேகமாக வேலை பார்க்க ஆரம்பித்தனர். எப்போது எந்த ஊர் ரேஷன் கடைக்கு முதல்வர் வருவாரோ என்ற எதிர்பார்ப்பு காரணமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் நியாய விலை கடை பணியாளர்கள் துரிதமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர். எனவே முதல்வர் இதுபோல அப்போது மக்கள் நல பணிகளை திடீரென நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

  மனு வழங்கிய பெண்

  மனு வழங்கிய பெண்

  சமீபத்தில் முதல்வர் தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு பெண் மனு வழங்குவதற்கு விரும்பியதால் நடுரோட்டில் காரை நிறுத்தச் சொல்லி அந்தப் பெண்மணியிடம் மனு வாங்கினார். இதுவும் மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

  மக்களுடன் தொடர்பு

  மக்களுடன் தொடர்பு

  மக்களுடன் இணைந்து அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது ஸ்டாலினின் நீண்ட கால வழக்கமாகும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூட கிராமசபை கூட்டங்கள் நடத்தி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின். மக்களிடம் வாங்கிய மனுக்களின் மீது தீர்வு காண்பதற்காக தனியாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்துள்ளார். சமகால அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுக்க அதிக இடங்களில் சுற்றுப்பயணம் செய்த ஒருசில தலைவர்களில் ஸ்டாலினும் ஒருவர். இந்த நிலையில்தான் முதல்வரான பிறகும், மக்களோடு மக்களாக அவர் கலந்து பழகி வருவது வரவேற்பை பெற்றுள்ளது.

  English summary
  Tamil Nadu chief minister MK Stalin suddenly visited a ration shop in Chennai to monitor relief activities on today. The media was not informed in advance of his departure.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X