சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடிக்கு பதில் வாழ்த்து முதல் ஓபிஎஸ்ஸுடன் டீ விருந்து வரை.. வித்தியாசமான முதல்வராகும் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்று கொண்ட ஸ்டாலின், தேர்தல் முடிவுகள் வந்த நாள் முதல் எதிர்க்கட்சியுடன் கடைப்பிடிக்கும் அரசியல் நாகரீகத்தால் அவர் வித்தியாசமான நிர்வாகியாக உருவெடுப்பார் என்றே தெரிகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வென்றது. இதையடுத்து தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அப்போதும் கூட ஸ்டாலின் எந்தவித தலைக்கனமும் இல்லாமல் எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் சேர்ந்ததே சட்டசபை. உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை வழங்கலாம். அதை அரசு பரிசீலிக்கும் என ஸ்டாலின் தெரிவித்திருந்ததை பார்த்ததும் எடப்பாடியாரே சற்று அதிர்ந்திருப்பார்.

முதல் நாளிலேயே பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசு நகர பேருந்துகளில்.. நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்முதல் நாளிலேயே பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசு நகர பேருந்துகளில்.. நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்

காட்சிகள்

காட்சிகள்

தேர்தல் பிரச்சாரத்திலும் சரி அதற்கு முன்பும் சரி திமுகவை அதிமுக சாடுவதும் அதிமுகவை திமுக சாடுவதும் என இருந்த காட்சிகள் சடாலென மாறி இருவரும் பரஸ்பரம் அரசியல் நாகரீகத்தை கையில் எடுத்துள்ளார்கள். அது போல் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது.

தமிழகம்

தமிழகம்

இதே கொரோனா இல்லாமல் சாதாரண காலமாக இருந்திருந்தால் தமிழகத்தில் திமுகவினர் நடத்தியிருக்கும் கொண்டாட்டம் மிக சிறப்பானதாக இருந்திருக்கும். எனினும் ஸ்டாலின் தொண்டர்களின் உடல்நிலையில் அக்கறை கொண்டு யாரும் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

புகைப்படம்

புகைப்படம்

அது போல் இன்றைய தினம் பதவியேற்பு விழாவில் கூட சக அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு எழுந்து நின்று வணக்கம் கூறுவது உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தார். அது போல் ஆளுநருடனான தேநீர் விருந்தில் ஸ்டாலின் செய்ததுதான் ஹைலைட்டே! இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடுவில் ஆளுநர்

நடுவில் ஆளுநர்

நடுவில் ஆளுநர், ஆளுநருக்கு இரு புறமும் ஸ்டாலினும் துரைமுருகனும், ஸ்டாலினுக்கு பக்கத்தில் தனபால், துரைமுருகனுக்கு பக்கத்தில் துணை முதல்வராக இருந்த ஓ பன்னீர் செல்வம். எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் இணைந்து இருப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழி வகுக்கும். இது போன்ற தனித்திறமைகள் மூலம் மு.க.ஸ்டாலின் வித்தியாசமான நிர்வாகியாக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

English summary
Tamilnadu CM MK Stalin will become different kind of Administrator.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X