சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலினின் திடீர் விசிட்டுகள்.. பரபரக்கும் நேரடி ஆய்வுகள்.. பெருகும் நம்பிக்கைகள்

முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் திடீர் விசிட்டுகள் நல்ல பலனை பெற்று தருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: திடீர் திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் அதிரடி ஆய்வுகள் மிகப்பெரிய தாக்கத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகின்றன.

10 வருட காலத்துக்கு பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், அந்த ஆட்சியை மிக சரியாகவும், நேர்மையாகவும் நிலைநிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆய்வுகள், அதிரடிகள், தமிழக அரசின் அறிவிப்புகள், கூட்டங்கள், ஆலோசனைகள் போன்றவைகள் பக்க பலமாக இருந்து வருகின்றன..

கேம்ப் எப்படி இருக்கு? முன்னறிவிப்பின்றி காரில் வந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. திகைத்த அதிகாரிகள்கேம்ப் எப்படி இருக்கு? முன்னறிவிப்பின்றி காரில் வந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. திகைத்த அதிகாரிகள்

விசிட்டுகள்

விசிட்டுகள்

இதில் ஒன்று, முதல்வரின் அதிரடி ஆய்வுகளும், திடீர் விசிட்டுகளும் குறிப்பிடத்தக்கதாகும்.. திமுக பொறுப்பேற்றபோது, மிகப்பெரிய தொற்று பாதிப்பில் தமிழகம் சிக்கி கொண்டிருந்த நிலையில், முழுவீச்சில் அரசு எந்திரம் களமிறங்கியது.. அப்போது சென்னைக்கு அடுத்தபடியாக கொங்கு பகுதியில் தொற்று பாதிப்பு அதிகம் இருந்தது.. அப்போதெல்லாம் நேரடியாகவே சென்று சுகாதார பணிகளை பார்வையிட்டார் முதல்வர்.

சென்னை

சென்னை

அப்படித்தான் தொற்று கலக்கத்தை தந்த நேரம், ஒருநாள் திடீரென சென்னையில் உள்ள கொரோனா வார் ரூமிற்கு சென்று பார்வையிட்டது பெரிய வரவேற்பை பெற்றது.. இந்த வார் ரூமில் கொரோனா நோயாளிகளுக்கு பெட் ஒதுக்குவது, ஆக்சிஜன் தேவையை கண்காணிப்பது, புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பது என்று பல முக்கிய விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன..

Recommended Video

    உயிரிழப்புகளைத் தடுக்க Marina Beach-ல் Lifeguard Unit தொடக்கம் | Oneindia Tamil
    போன்

    போன்

    போன் செய்து உதவி கேட்கும் மக்களுக்கு வார் ரூமில் உடனுக்குடன் உதவி செய்யப்பட்டு, தீர்வுகள் வழங்கப்பட்டன.. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் இந்த வார் ரூம் தொடங்கப்பட்டது... இங்குதான் ஒருநாள் இரவு 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் இங்கு திடீர் விசிட் அடித்து, வார் ரூம் எப்படி இயங்குகிறது என்று பார்த்துள்ளார்... எந்தவித முன்னறிவிப்புமின்றி ஸ்டாலினின் திடீர் விசிட் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.

     நேரில் ஆய்வு

    நேரில் ஆய்வு

    அதேபோல, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன... அந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்படுகிறது என்பது குறித்து திடீரென ஒருநாள் முதல்வர் ஆய்வு செய்தார்... அந்த துறையின் அலுவலக கதவுகளை திறந்து உள்ளே சென்ற முதல்வர், மேரி என்ற பயனாளி ஒருவருக்கு போன் செய்து, 'உங்க கோரிக்கை என்ன ஆச்சும்மா" என்று கேட்ட வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.

     திடீர் விசிட்

    திடீர் விசிட்

    இதேபோலதான் நேற்றைய தினமும் ஒரு திடீர் விசிட் நடந்துள்ளது.. தமிழகத்தில் நேற்று 2-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.. தமிழகம் முழுவதிலும் நடைபெறும் ஆயிரக்கணக்கான முகாம்களில் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், சத்துணவு கூடங்கள் என உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

     நேரடி ஆய்வு

    நேரடி ஆய்வு

    மக்களை ஊக்குவிக்கும் விதமாக இன்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கு பல மாவட்ட நிர்வாகங்கள் பரிசுகளையும் அறிவித்திருக்கின்றன... இந்த நிலையில்தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை அருகே உள்ள தடாக நகர் சமுதாயக் கூடத்தில் நடந்து வந்த தடுப்பூசி முகாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்... தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் அங்குள்ள குறிப்புகளையும் ஆய்வு செய்தார்...

    விசாரிப்பு

    விசாரிப்பு

    தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் நின்றிருந்தவர்களிடம் உடல்நலம் விசாரித்து கேட்டறிந்தார்.. இந்த ஆய்வும் முன்னறிவிப்பின்றி நடந்தது... இதெல்லாம் ஒரு மாநில அரசு மேற்கொள்ளும் வழக்கமான ஆய்வுகள் என்றும் கடந்துவிட்டு போக முடியாது.. முன்னறிவிப்பாமல், இப்படியான நேரடி ஆய்வுகள், விசிட்டுகள் நடத்துவது அந்தந்த துறை அதிகாரிகளுக்கு பதற்றமடைய செய்தாலும், அரசு எந்திரத்தின் பொறுப்புணர்ச்சிகள் அதிகமாகி வருகின்றன என்பதை மறுக்க முடியாது..

     கடமை உணர்ச்சி

    கடமை உணர்ச்சி

    அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆய்வுகள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஒருவித பயமும், கடமைஉணர்வும் அதிகாரிகளிடம் கூடுதலாக அதிகரித்து வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக மக்களிடமும் ஒருவித தமிழக அரசுடன் ஒருவித நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது.. அந்த வகையில் முதல்வர் மேற்கொள்ளும் திடீர் திடீர் ஆய்வுகளும், விசிட்டுகளும் நல்ல பலனை பெற்று தந்து கொண்டிருக்கின்றன.

    English summary
    CM MKS Stalins Sudden inspection in covid 19 vaccination
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X