சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காய்ச்சல் மாத்திரை உட்கொள்ளும் பயணிகள்.. தெர்மல் ஸ்கேனரில் தப்பும் கொரோனா அறிகுறியினர்- முதல்வர்

Google Oneindia Tamil News

சென்னை: காய்ச்சலுக்கான மாத்திரை சாப்பிடுவதால் தெர்மல் ஸ்கேனரில் இருந்து வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருவோர் தப்பிவிடுகின்றனர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமை படுத்திக்கொள்ளுங்கள் | முதல்வரின் வேண்டுகோள்

    இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பேசுகையில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கமாக தெளிவாக கொரோனா வைரஸ் நோயினுடைய தன்மையை தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறது.

    இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

    நல்ல செய்தி.. இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் கருவி ரெடி... விலை ரூ. 80000, சூப்பர் தகவல் நல்ல செய்தி.. இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் கருவி ரெடி... விலை ரூ. 80000, சூப்பர் தகவல்

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயைப் பொறுத்தவரைக்கும் வேகமாக பரவக் கூடிய ஒரு நோய். சுகாதாரத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளதை போல் சுமார் 187 நாடுகளிலே இந்த நோய் பரவியிருக்கிறது. மாவட்ட எல்லைகள் மூடுவது மட்டுமல்ல, பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து தங்களை தனிமைப்படுத்தி இந்த நோயை தடுக்கும் பணிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். அதோடு அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லலாம். கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து, பரிசோதனை செய்து அந்த நோயினுடைய தன்மையை அறிந்து, அவர்கள் உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த தருணத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

    பரிசோதனை

    இது ஒரு கொடிய நோய், தொற்று நோய். ஆகவே இந்த நோய் வந்தவர்கள் பிறரிடம் பேசுவதோ, தொடர்பு வைத்துக் கொள்ளவோ கூடாது. இது வேகமாக பரவக் கூடிய நோயாக இருக்கின்ற காரணத்தினாலே, அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களை முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முழு பரிசோதனை செய்து கொண்டால் தான் மற்றவர்களுக்கு அந்த நோய் வராமல் தடுக்க முடியும். அந்த நோய் வருவதற்கு உண்டான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவர்களை சந்தித்து, மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று குணமாகலாம்.

    நோய் பாதிப்பு

    நோய் பாதிப்பு

    தமிழகத்தை பொறுத்தவரைக்கும் எங்களுடைய அரசு, முழு மூச்சுடன் இன்றைக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணிகளை பரிசோதனை செய்து அந்த பரிசோதனையிலே நோய் கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்து, குணமடையக் கூடிய அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்து குணமடையக் கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்குகிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட நம்முடைய மருத்துவர்கள் தகுந்த சிகிச்சை அளித்த காரணத்தினாலே அவர் குணமடைந்து இருக்கிறார். ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் அச்சப்பட தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கென்று தனி வார்டுகள் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையிலே சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

    காய்ச்சலுக்கான மாத்திரை

    காய்ச்சலுக்கான மாத்திரை

    எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து வரும் சில பேர் காய்ச்சலுக்கான மாத்திரையை உட்கொள்வதன் காரணத்தினால் இந்த பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் சில பேர் பெங்களூரில் இறங்கி, நமது மாநிலத்திற்கு வந்து விடுகிறார்கள். அதோடு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இந்தியாவில் உள்ள பிற விமான நிலையங்களிலிருந்து இறங்கி நமது மாநிலத்திற்கு வந்துவிடுகிறார்கள். அவர்களை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி வெளிநாட்டிலிருந்து விமானம் மூலமாக பிற மாநிலத்திலிருந்து வந்தவர்கள் வீட்டிலே இருந்தாலும் உடனடியாக அருகில் இருக்கிற மருத்துவமனைக்கு சென்று தங்கள் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அன்போடு அவர்களை கேட்டுக் கொள்கிறேன். அதே போல் அரசு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருக்கிறது.

    காரணம்

    காரணம்

    அவர்களும் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளாமில் இருக்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன். இதற்காக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறையை அரசு உருவாக்கி இருக்கிறது. ஏதாவது நோய் தென்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதை எல்லாம் இவ்வளவு வலியுறுத்தி சொல்வதற்கு காரணம், நோய் வந்துவிட்டால், கடுமையாக பாதிக்கப்பட்டு விடுகிறார்கள். வரும் முன் காப்போம் என்ற அடிப்படையிலே பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

    தடுப்பு பணிகள்

    தடுப்பு பணிகள்

    தினந்தோறும் அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யார் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரத்தை உடனுக்குடன் எங்களுக்கு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார். அரசை பொறுத்தவரைக்கும் வேகமாக, துரிதமாக இன்றைக்கு நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

    English summary
    CM Edappadi Palanisamy says that some foreign passengers who came to Tamilnadu took tablets to cure fever. Thats why they escapped from scanner.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X