பட்டுப்புடவையில் கலைநயம்! செலவு எவ்வளவு? மாற்றியோசித்த திமுக மகளிரணி நிர்வாகி சிம்லா முத்துச்சோழன்!
சென்னை: திமுக மகளிரணி நிர்வாகி சிம்லா முத்துச்சோழன் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்காவுக்கு வழங்கியுள்ள வித்தியாசமான பரிசு ஒன்று சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
தூய வெள்ளி ஜரிகை மூலம் உருவாக்கப்பட்ட ஒரிஜினல் பட்டுச்சேலை மற்றும் வெண்பட்டு வேட்டியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்காவின் உருவத்தை பட்டு இழைகளால் நெய்துள்ளார்.
மறைந்த முன்னாள் திமுக துணைப் பொதுச்செயலாளர் சற்குணப்பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க ஒரிஜினல் பட்டு ஜரிகைகளால் நெய்யப்பட்டதால் பட்டுச்சேலை மற்றும் பட்டு வேட்டியின் மதிப்பு ரூ.2 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இந்தச் சேலையையும், பட்டுவேட்டியையும் நெய்த குமரவேல் இது குறித்து கூறுவதாவது;
ஸ்டாலின் ரூமில் காலடிவைத்த ஓபிஎஸ் மகன்.. முதல்வரை தனியாக சந்தித்த ரவீந்திரநாத்.. என்ன காரணம்?

மகளிரணி நிர்வாகி
''எனது பக்கத்து வீட்டுக்காரர் சுரேஷ் என்பவரிடம் தி.மு.க. பிரமுகர் சிம்லாமுத்துச்சோழன், பட்டுச்சேலையில் தமிழக முதலமைச்சரின் உருவத்தை வடிவமைத்துதரும் வகையில் நெசவாளர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டுள்ளார்.இதையடுத்துஅவர் என்னைப் பற்றி கூறியிருக்கிறார், அதன்படி என்னைத் தொடர்பு கொண்ட திமுகமகளிரணி பிரமுகர் சிம்லா முத்துச்சோழன், தூய பட்டு ஜரிகையில், தக்காளிநிறத்தில் பட்டுப்புடவை நெய்து கொடுக்கக் கூறினார்.''

கலைநயம்
''இரண்டு முழம் நீளத்திலும், இரண்டே முக்கால் முழம் அகலத்திலும் ஒருபட்டுச் சேலையை நானும் எனது மனைவியும் நெய்தோம். இதில் சிறப்புஎன்னவென்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி எழுதிய அவரும் நானும் என்றபுத்தகத்தின் முன்பக்க அட்டைப் படத்தை சேலையின் முந்தானையிலும்,புத்தகத்தில் உள்ள வாசகங்களை சேலையின் உடல் முழுவதும் இருக்கும் வகையிலும் வடிவமைத்தோம்.''

2 மாத உழைப்பு
'' 4 பேர் இணைந்து தொடர்ந்து 2 மாதங்கள் உழைத்து இப்பட்டுச்சேலையைஉருவாக்கினோம். சேலை பாடர் முழுவதும் அவரும் நானும் என்ற எழுத்துக்கள்மட்டும் வரிசையாக இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். இதே போல முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் எழுதி வெளியான உங்களில் ஒருவன் என்ற புத்தகத்தின்அட்டைப்படத்தை வெண்பட்டு வேட்டியின் கரையாகவும்,உங்கள்தொகுதியில் ஸ்டாலின்என்ற வாசகங்கள் உள்ள வெண்பட்டு அங்கவஸ்திரமும் வடிவமைத்தோம்.''

பட்டுச் சேலை
''நாங்கள் உருவாக்கிய கைத்தறி பட்டுச் சேலையை அண்மையில் தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சிம்லா முத்துச்சோழன் வழங்கினார். இதே போலகடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பக்தர் ஒருவர்கேட்டுக்கொண்டபடி திருப்பாவையின் 30 பாசுரங்களும் அடங்கிய பாடல்வரிகளை
சேலையின் உடலில் நெய்து கொடுத்துள்ளோம்.''