சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாணியம்பாடி கூட்டநெரிசலில் பலியான 4 பெண்கள்.. தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் துரதிர்ஷ்டவசமாக பலியான நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 4 பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாகவும், கடும் காயமடைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஜின்னா பாலம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நாளை தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளது.

இதையடுத்து இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான டோக்கன் இன்று வழங்கப்பட்டது. வாணியம்பாடி ஜின்னா மேம்பாலம் அருகே டோக்கன் வழங்கப்பட்டது.

வாணியம்பாடி அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம் வாணியம்பாடி அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம்

 கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி

கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி

இந்த வேளையில் எதிர்பார்த்தனை விட ஏராளமான பெண்கள் குவிந்தனர். இதில் அதிகமானவர்கள் முதியவர்கள் ஆவார்கள். டோக்கனை பெற இவர்கள் முண்டியடித்தனர். இதனால் கூட்ட நெரிசலில் சிலர் மயங்கினர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு வாணியம்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் காயமடைந்த 12 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களின் பெயர் விபரம்

இறந்தவர்களின் பெயர் விபரம்

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். விசாரணையில் குரும்பட்டியை சேர்ந்த வள்ளியம்மாள் (வயது60), ஈச்சம்பட்டு நாகம்மாள் (60), பழைய வாணியம்பாடி மல்லிகா (65), அரபாண்டகுப்பத்தை சரே்ந்த ராஜாத்தி (60) ஆகியோர் இறந்தது தெரியவந்தது. மற்ற 12 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாட்டாளரான தொழிலதிபர் ஐயப்பன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.2 லட்சம் நிவாரணம்

ரூ.2 லட்சம் நிவாரணம்

இந்த சம்பவத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான பெண்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பெயரில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் நகர காவல் எல்லைக்குட்டப்ட்ட டே்டி, சேலை வழங்க டோக்கன் வினியோகிக்கப்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி வள்ளியம்மாள், ராஜாத்தி, ரநாகம்மாள், மல்லிகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்துக்கு காரணமான அய்யப்பன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துயர சம்பவத்தை கேள்வியுற்று நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களை பிரிந்து வாழும் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

காயமுற்றோருக்கு ரூ.50 ஆயிரம்

காயமுற்றோருக்கு ரூ.50 ஆயிரம்


நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான நான்கு பெண்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Chief Minister Stalin has announced relief to the families of 4 women killed in Vaniyambadi stampede in Tirupathur district. Chief Minister Stalin said that Rs.2 lakh each will be given to the families of 4 women from the Chief Minister's General Relief Fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X