சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலினின் ஆக்‌ஷன்.. ஒரே நாளில் அறிவிப்பு.. டீமில் இடம்பெற்ற பெண் உறுப்பினர்.. என்ன காரணம்?

சமூக நீதி கண்காணிப்புக்குழுவில் டாக்டர் சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: மகளிர்- மாணவர் உரிமைக்காகப் போராடும் டாக்டர் சாந்தி சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் ஒரு உத்தரவை நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

சில தினங்களுக்கு முன்பு அதாவது, சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளினையொட்டி முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. அதில், "சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக "சமூகநீதிக் கண்காணிப்புக் குழு" அமைக்கப்படுகிறது

சுப வீ தலைமையில் குழு.. பாலின சமத்துவமே இல்லை.. சமூக நீதி சாத்தியம் எப்படி .. எழும் விமர்சனங்கள் சுப வீ தலைமையில் குழு.. பாலின சமத்துவமே இல்லை.. சமூக நீதி சாத்தியம் எப்படி .. எழும் விமர்சனங்கள்

 கண்காணிப்புக்குழு

கண்காணிப்புக்குழு

அந்த கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும்.. வழிகாட்டும், செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும்.. இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.,

அறிவிப்பு

அறிவிப்பு

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து,
சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை" அமைத்து ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்..
அந்த குழுவில் தலைவராக பேராசிரியர் சுப. வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்... இதேபோல் உறுப்பினர்களாக . முனைவர் கே. தனவேல், ஐஏஎஸ் (ஓய்வு) , பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன் , கோ. கருணாநிதி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இந்த குழுவின் நியமனத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.. காரணம், தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுப. வீரபாண்டியன், சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு போன்ற கருத்துகளை தமிழகம் முழுவதும் விடாமல் பரப்பி கொண்டிருப்பவர்.. சமூகநலன் குறித்த அவரது பேச்சுக்கள் தமிழக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பவை.. அதேபோல, உறுப்பினரான கே. தனபால், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர்.. மத்திய அரசிலும், மாநில அரசிலும் ஏராளமான முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.. இப்படி ஒவ்வொருவருமே திறமைசாலிகள்தான்.. அனுபவிஸ்தர்கள்தான்..

 பெண் உறுப்பினர்

பெண் உறுப்பினர்

ஆனாலும் இந்த குழுவின் நியமனத்தில் ஒரு குறை எழுந்தது.. பார்த்து பார்த்து குழுவை நியமித்த முதல்வர் ஸ்டாலின், சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களில் ஒரு பெண் கூட நியமிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியது.. குழுவில் உறுப்பினராக ஒரு பெண் கூட இல்லை.. அப்பறம் எப்படி, பாலின சமத்துவமே இல்லாத குழு சமூக நீதியை கண்காணிக்கும்? என்ற கேள்வியையும் சில ஊடகங்கள் எழுப்பின.. சோஷியல் மீடியாவிலும் இது விமர்சனங்களாகவும், விவாதங்களாகவும் வெடித்தது.

அறிவிப்பு

அறிவிப்பு

ஆனால், ஒரே நாளில் இதற்கு தீர்வு ஏற்படுத்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. அதன்படி, அந்த குழுவில் ஒரு பெண்ணையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.. மகளிர்- மாணவர் உரிமைக்காக போராடும் டாக்டர் சாந்தி சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

 டாக்டர் சாந்தி

டாக்டர் சாந்தி

இது குறித்து ஒரு செய்திக்குறிப்பும் வெளியாகி உள்ளது.. அதில், "தமிழக அரசின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவில், மாணவர் சமுதாயத்துக்கான சமூக நீதி, மகளிர் உரிமை, பெண்களுக்குச் சமூகப் பங்களிப்பில் அதிகாரமளித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டுள்ள டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்தை உறுப்பினராக நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என கூறப்பட்டுள்ளது.

விமர்சனம்

விமர்சனம்

ஆரம்பத்தில் இருந்தே திமுக அரசு ஜாக்கிரதையாக காய்நகர்த்தி வருகிறது.. அரசு நியமனங்கள், செயல்பாடுகளில் மக்களின் நன்மதிப்பை நேரடியாக பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.. அதையும் மீறி விமர்சனங்கள், அதிருப்திகள், குறைகள் ஏதேனும் தென்பட்டால் அதை உடனடியாக சரி செய்து கொள்ளும் பக்குவத்தையும் பெற்று வருகிறது.. அந்த வகையில் டாக்டர் சாந்தியின் நியமனமும் ஒன்றாகவே கருதப்படுகிறது.

English summary
CM Stalin announces that, Dr Shanthi Ravindranath has been appointed as a member of the social justice monitoring committee
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X