அடுத்தடுத்து "3 சகுனங்கள்.." எல்லாமே சேகர் பாபு தொடர்பானவை.. தலைமைக்கு போன முக்கிய அட்வைஸ்!
சென்னை: மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த 3 சம்பவங்களை கண்டு திமுகவின் "குடும்ப தலைகள்" கவலையடைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில பரிகாரங்கள் பண்ணவேண்டும் என துர்கா ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார்கள் ஜோதிடர்கள். அது என்ன சம்பவம்.. என்ன நடக்கிறது திமுகவில்? வாருங்கள் பார்க்கலாம்.
தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடந்த தேர் பவனி உலாவில் மின்சார கம்பியில் தேர் உரசியதில் ஏற்பட்ட மின் விபத்தினால் 12 பேர் இறந்து போனார்கள். தேசிய அளவில் இந்த விபத்து ஏற்படுத்திய துயரம் ஜீரணிக்க முடியாததாக இருந்தது.
அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்ததற்கு ஹைகோர்ட் தடை!சேகர் பாபு பதில் இதுதான்

ஸ்டாலின் தஞ்சை
சட்டமன்றத்தில் இந்த துயரத்தை பகிர்ந்துகொண்டதோடு உடனடியாக தஞ்சைக்கு கிளம்பி சென்றார் முதல்வர் ஸ்டாலின். கோவில் திருவிழா என்பது இந்து அறைநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் அமைச்சர் சேகர்பாபு. அதேபோல அன்றைய தினம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தும் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

அமைச்சர் யார்?
மருத்துவமனை நிர்வாகம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதேசமயம், சேகர்பாபுவின் தொகுதியான துறைமுகம் தொகுதிக்குள் வருகிறது இந்த அரசு பொது மருத்துவமனை. மேலும், அன்றைய தினமே, சென்னை அயோத்தியா மண்டப விவகாரத்தில் அந்த நிர்வாகத்தை அமைச்சர் சேகர்பாபுவின் இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முயற்சித்தது தொடர்பான வழக்கில் இந்து அறநிலைதுறைக்கு எதிராக தீர்ப்பு வந்தது.

3 சம்பவம்
ஆக, இந்த 3 சம்பவங்களும் ஆட்சிக்கு நல்லதல்ல என்கிற சமிக்ஜையை கொடுப்பதாகவே ஆன்மீகவாதிகள் மத்தியிலும், ஜோதிடர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் சுழன்றுகொண்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆன்மீகவாதிகள், ''முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஆன்மீகவாதி. ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் நம்பிக்கைக் கொண்டவர். மக்கள் அதிகம் இருக்கக் கூடிய கோவில் திருவிழாவில் மின் விபத்து ; மரணம். மின் விபத்து என்பதை தீ என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தீ விபத்து
அதேபோல மக்கள் அதிகமுள்ள மருத்துவமனையில் தீ விபத்து. இப்படி ஒரே நாளில் இப்படிப்பட்ட விபத்துகள் ஏற்படக்கூடாது. இந்த தீ விபத்துகள் பதவியில் இருப்பவர்களுக்கு நல்லது கிடையாது. அதேபோல, ஆன்மீகவாதிகளின் மனம் புண்படும் வகையில் அயோத்தியா மண்டப விவகாரத்தில் இந்து அறநிலையத்துறை நடந்துகொண்டிருக்கக் கூடாது. இதுவும் கெட்ட சமிக்ஞையை சொல்வதாகத் தான் அர்த்தம்.

சகுனம்
இந்த 3 சம்பவங்களுமே ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. அதேபோல ஆன்மீகவாதியான அமைச்சர் சேகர்பாபுவோடு தொடர்புடைய தாகவே இருக்கிறது. அவரது பதவிக்கும் ஆபத்து வரலாம். இந்த சம்பவங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சொல்கிறார்கள் ஆன்மீகவாதிகள். இதற்கிடையே இதே எதிர்மறை விசயங்களை திமுகவின் குடும்ப பெண் தலைவர்களிடம் சொல்லப்பட்டுள்ளதாம்.

பரிகாரம்
இதனையடுத்து, இதற்கான பரிகாரங்களை செய்ய குடும்ப பெண்கள் ஆலோசித்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், அமைச்சர் சேகர்பாபுவிடம், நடப்பது நல்லதில்லை. உங்கள் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வரலாம் என்று அவரது ஆன்மீக வட்டாரங்கள் எச்சரிக்கை செய்ததாக தகவல்கள் வருகிறது. இதனையடுத்து சேகர்பாபுவும் பரிகாரங்கள் செய்ய ரகசியமாக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.