India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவை எதிர்க்க வலுவான தலைவர் இல்லையா? என்ன சொல்றீங்க? ஸ்டாலின் இருக்காரே! மே.வங்க எம்பி மஹுவா பளீர்

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டில் பாஜகவை எதிர்க்க வலுவாக தலைவர் இருக்கிறார்.. அவர் முதல்வர் ஸ்டாலின் என்று மேற்கு வங்க எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கிய 'காளி' என்கிற ஆவணப்படம் நாடு முழுக்க புயலை கிளப்பி வருகிறது. இந்த ஆவண பட போஸ்டரில் காளி வாயில் சிகரெட் வைத்து இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முக்கியமாக வட மாநிலங்களில் இந்த போஸ்டர் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லி, உத்தர பிரதேசத்தில் வழக்கும் பதியப்பட்டுள்ளது.

பாஜக VS பத்திரிகையாளர்கள்.. தொடரும் மோதல் - இன்றைய சம்பவம் திருவள்ளூரில்! செல்போன் அபேஸ் பாஜக VS பத்திரிகையாளர்கள்.. தொடரும் மோதல் - இன்றைய சம்பவம் திருவள்ளூரில்! செல்போன் அபேஸ்

காளி

காளி

இந்த நிலையில்தான் திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் காளி ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு விதமாக பார்க்கப்படுகிறார். காளியை மேற்கு வங்கத்தில் மது குடிக்கும் கடவுளாக பார்ப்பார்கள். காளிக்கு மதுவையும், மாமிசத்தையும் கொடுப்பார்கள். அந்த வழக்கம் உள்ளது.

மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா

இதே வழக்கம் உத்தர பிரதேசத்தில் இல்லை. அங்கே வேறு வழக்கம் உள்ளது. இதை எல்லாம் வைத்து பிரச்சனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, என்று மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டுஇருந்தார் . இந்தியா டுடே கான்கிளேவ் நிகழ்ச்சியில் அவர் இப்படி பேசி இருந்தார். இந்த நிலையில் பாஜகவை எதிர்க்க வலுவான தலைவர் நாட்டில் இல்லை என்று நினைக்கிறீர்களா என்று மஹுவா மொய்த்ராவிடம் அந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இதற்கு பதில் அளித்த மஹுவா மொய்த்ரா, ஸ்டாலின் வலுவான தலைவராக இருக்கிறார். அவர் அனைத்து துறைகளிலும் வலுவாக இருக்கிறார். நான்தான் வலுவான லீடர் லீடர் என்று சொல்ல கூடாது. எனக்கு 56 இன்ச் மார்பு இருக்கிறது என்று நெஞ்சை தட்டிக்கொண்டு இருக்க கூடாது. இதெல்லாம் தேவையில்லாதது. அதில் என்ன திறமை இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு வலுவான தலைவர்கள் இல்லை என்ற கட்டுக்கதையை நிலைநிறுத்துவதை நிறுத்துங்கள்.

 வலிமையான தலைவர்

வலிமையான தலைவர்

அப்படி ஒரு வாதம் வைப்பது தவறு. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை ஸ்டாலினைப் பாருங்கள். பா.ஜ.க. தனது முழு பலத்துடன் தமிழகத்தில் வாலைக் கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு ஓடியது. பாஜக அங்கு ஏன் ஸ்டாலினிடம் வெற்றிபெற முடியவில்லை?.. முதல்வர் மம்தா பானர்ஜி வலுவான தலைவர்தான்.. என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

English summary
CM Stalin is a strong leader and strong opposition to BJP says TMC MP Mahua Moitra. நாட்டில் பாஜகவை எதிர்க்க வலுவாக தலைவர் இருக்கிறார்.. அவர் முதல்வர் ஸ்டாலின் என்று மேற்கு வங்க எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X