"கலைஞர் போட்ட பிச்சை".. வார்த்தையை விட்ட ஏவ வேலு.. வார்னிங் தந்த உளவுத்துறை! போனில் ஆவேசமான ஸ்டாலின்
சென்னை: சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக அமைச்சர் ஏவ வேலுவை கடிந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
லோக்சபா தேர்தல் அடுத்த வருடம் நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் அமைச்சர்களையும், எம்பிக்களையும் பாஜக , அதிமுக நெருக்க தொடங்கி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கூட இப்படித்தான் டெல்லியால் குறி வைக்கப்பட்டு உள்ளார். போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் தொடர்பான பண மோசடி விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரின் மீது செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. தொடர்ந்து 5 நாட்களாக தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் 1 மணி நேரத்தில் 200 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் அவருக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். நெருக்கமான சொந்தங்கள் உள்ளனர்.
கட்சி நிர்வாகிகள் தாண்டி ரத்த சொந்தங்கள் அதிகம் உள்ளனர். அங்கே செந்தில் பாலாஜியின் பினாமிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், நெருக்கமான சொந்தங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்றும் கருதி அங்கே அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் ரெய்டு நடத்தினர்.
இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது அமலாக்கத் துறை. கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் அமைச்சர்கள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் என்று சமீபத்தில் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த மீட்டிங்கில் அமைச்சர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி பேச வேண்டும். சர்ச்சைகளை எப்படி தவிர்க்க வேண்டும். எந்த முறைகேடும் செய்ய கூடாது. டெண்டர்களில் கவனமாக இருக்க வேண்டும். ஒப்பந்தங்களை கவனமாக செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. வழக்குகள் உள்ள அமைச்சர்களிடமும் முதல்வர் ஸ்டாலின் தனி தனியாக பேசி உள்ளார்.
கோபம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக அமைச்சர் ஏவ வேலுவை கடிந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் உருவாக்கியவர் கலைஞர். உயர்நீதிமன்ற மதுரை கிளை, கலைஞர் போட்ட பிச்சை " என பேசினார்.
பிச்சை என்ற வார்த்தை கூட்டத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வார்த்தை பிரயோகம் அதிமுக தரப்புக்கு சென்ற நிலையில் இதனை சர்ச்சையாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், உளவுத்துறை மூலம் இதனை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் வேலுவை தொலைபேசியில் பிடித்து, கடிந்து கொண்டிருக்கிறார்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications