• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் புதிய நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து புதிய நூல்களை வெளியிட்டார்.

கருணாநிதி மேற்கொண்ட பெரும் முயற்சியால், உலகின் மூத்த மொழியாம் சொல் வளமும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழி 20004 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் மத்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என கருணாநிதி கனவை நிறைவேற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் 2006ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்காகன நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செம்மொழிக்கான நிறுவனமொன்று அமைக்கப்பட்டது.

CM Stalin releases 12 new books in Central Institute of Classical Tamil

பின்னர் 2008ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமையப் பெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. தொல் பழங்காலம் முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இஸலக்கிய , தமிழ்மொழி ஆய்விலும் அதன் மேம்பாட்டிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

செம்மொழித் தமிழின் தொன்மையும் தனித்தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்த நிறுவனம் கொண்டுள்ளது. கருணாநிதியால் 2007 ஆம் ஆண்டு சென்னைக்கு அருகில் உள்ள பெரும்பாக்கத்தில் 16.86 ஏக்கர் நிலம் தமிழக அரசின் சார்பில் செம்மொழி நிறுவனத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிலத்தில் ரூ 24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டடம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக் குழு தலைவரான தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 12.1.2022 அன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டடம் தரைத்தளத்துடன் மொத்தம் 4 தளங்களைக் கொண்டுள்ளது. தரைத் தளத்தில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான நூல்களைக் கொண்ட நூலகமும், திருவள்ளூர் அரங்கம் மற்றும் தொல்காப்பியர் அரங்கம் என இரு கருத்தரங்க அறைகளும் உள்ளன. முதல் தளத்தில் கல்விச் சார் பணியாளர்களுக்கான அறைகள், அலுவலகம், இயக்குநர், பதிவாளர் மற்றும் நிதி அலுவலர் ஆகியோருக்கான அறைகள் உள்ளன. இரண்டாம் தளத்தில் மின் நூலகம், காட்சி வழி கற்பித்தல் அரங்கு, வலையொளி அரங்கும் முதலானவையும் உள்ளன. மூன்றாம் தளத்தில் வருகை தரு பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்யும் விதமாக அமைக்கப்படவுள்ளது.

இத்தகைய சிறப்பான கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இன்று பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள புதிய வளாகத்திற்கு வருகை புரிந்து, அங்குள்ள நூலகத்தைப் பார்வையிட்டார். நூலகத்திலுள்ள பழமையான நூல்கள் குறித்தும், செவ்வியல் நூல்களின் மின்படியாக்கம் குறித்தும் ஆவலோடு கேட்டறிந்தார்.

மேலும் திருவள்ளூர் அரங்கம் மற்றும் தொல்காப்பியர் அரங்கம், கல்வி சார் பணியாளர்கள், நிர்வாகப் பிரிவு அலுவலகங்களைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செம்மொழி நிறுவன ஆய்வுசார் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது நிறுவன இயக்குநர் காட்சி வழி மூலம் நிறுவனத்தின் செயல்பாடுகளை விளக்கினார். அதில் இந்த நிறுவனத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகள், தற்போது செய்து கொண்டிருக்கும் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார்.

பின்னர் தமிழக முதல்வர் இந்த நிறுவனம் மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்தும் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் செம்மொழி நிறுவனத்தின் தொல்காப்பிய ஆய்வு, தெய்வச் சிலையார் உரைநெறி, ஐங்குறுநூறு குறிஞ்சி, ஐங்குறுநூறு பாலை, வாய்மொழி, வாய்ப்பாட்டுக் கோட்பாடு நோக்கில் சங்க இலக்கியம், புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு Dravidian Comparative Grammar-II, A Historical Grammar of Tamil ஆகிய எட்டு புதிய நூல்களை முதல்வர் வெளியிட் அதை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.

தமிழக முதல்வர் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட ஆலோசனைகளை வழங்கினார். தமிழாராய்ச்சி மற்றும் பதிப்புகள் தவிர இந்தக் கழகத்தின் பணிகளில் மாணவர்கள் மற்றும் தமிழார்வலர்களை அடையும் வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செம்மொழியின் பெருமைகளை வெகுமக்கள் அறியச் செய்ய தக்க ஊடக வழிகள் மற்றும் கருத்தரங்கள் ஆகியவற்றை நடத்த முயற்சி செய்ய வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களும் இம்மையத்தின் பணிகளை அறியச் செய்ய பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறையுடன் ஆலோசனை மேற்கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சி துறை, தமிழ் விர்சுவல் அகாதெமி போன்ற மாநில அரசின் தமிழ் பிரிவுகளுடன் இயன்றவரை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள விருதாளர்களுக்கு ஜனவரி 22 ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

English summary
CM Stalin releases 12 new books in Central Institute of Classical Tamil, Perumbakkam, Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X