சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியை பெருக்க வேண்டும்.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவிற்கு ஏற்றுமதியை பெருக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு இலக்காக வைத்து செயல்பட்டு வருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, தொழில்துறை சார்பில் "ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு" என்னும் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த ஏற்றுமதி மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு! வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

அதன்பின்பு மேடையில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், 2,120 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு தொழில் முனைவோர் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

10 புரிந்துணர்வு ஒப்பந்தம்

10 புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஊரக தொழில் துறை சார்பில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், தொழில் துறை சார்பில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் தொழில் முனைவோர் மாநாட்டில் மொத்தம் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் தொழில் வளர்ச்சி என்பது அனைத்து துறை வளர்ச்சி என்று நாம் அனைவரும் நம்ப வேண்டும்.

தொழில் வளர்ந்தால்

தொழில் வளர்ந்தால்

தொழில் வளர்ந்தால் அனைத்து துறைகளும் வளரும். இதே போல சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுதும் தொழில்துறை சார்ந்த மாநாடுகள் நடத்த அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சியாக மட்டுமல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியாக இருந்து வருகிறது.

ஏற்றுமதி மையம்

ஏற்றுமதி மையம்

இந்திய அளவில் தொழில்துறையில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சிறப்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை உலக அளவில் சந்தை படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.

மாநல்லூர்

மாநல்லூர்

மாநிலம் முழுவதும் பரவலாக ஏற்றுமதி மேற்கொள்ளும் வகையில் மாநல்லூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களில் பொருளாதார வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். Made in India என்பதையும் தண்டி உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும். 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவிற்கு ஏற்றுமதியை பெருக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஒன்றிய அரசின் கூடுதல் வர்த்தக செயலாளர் சஞ்சீவ் தத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
Tamilnadu CM Stalin says about export to be increased within 2030.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X