ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி சட்டசபையில் விரைவில் தீர்மானம்! முதல்வர்
சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி இந்த தமிழக சட்டசபை கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இன்றைய தினம் பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசுகையில், 12, ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வடமாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. எனவே 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அமலானால் அந்த பிரச்சினை சரி செய்யப்படும்.
இந்த இடஒதுக்கீட்டுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது எப்போது எடுக்கப்படும் என்பதை அமைச்சர்களின் வாயிலாக அறிய விரும்புகிறேன் என்றார். அப்போது சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தரவுகள் இல்லை என்பதால் உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் நிலுவையில் வைத்துள்ளது.
10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்த தரவுகளை சேகரிக்க பாரதிதாசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுக்கு இந்த அரசு எந்த வகையிலும் தடையாக இருக்காது என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சிவசங்கர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காகவே 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பாமக வலியுறுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தால்தான் தமிழகத்தில் நடத்த முடியும். எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உங்கள் கூட்டணி கட்சியினருடன் பேசுங்கள். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும். இதற்கு பாமக உறுப்பினர் கோ.க. மணி (ஜி.கே.மணி) ஆதரவு தர வேண்டும் என முதல்வர் பேசியிருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications