தாளாத துக்கம்.. பிரிய மனமில்லை.. சண்முகநாதனுக்கு 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி.. கண்ணீர்!
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மீண்டும் அஞ்சலி செலுத்தினார்.
திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். 80 வயதாகும் இவர் கருணாநிதியின் உதவியாளர் மட்டுமின்றி நெருங்கிய நண்பராகவும் பார்க்கப்பட்டார்.
'வார் ரூம்கள்' தேவை.. 3 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. மீண்டும் ஊரடங்கு? மத்திய அரசு பரபர கடிதம்
உடலநலக்குறைவு, வயோதிகம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலமானார். கடந்த சில மாதங்களாகவே இவர் உடல்நிலை மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சண்முகநாதன்
சண்முகநாதன் மருத்துவமனையில் இருந்த போதே முதல்வர் ஸ்டாலின் அவரை இரண்டு முறை சென்று சந்தித்தார். அதேபோல் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் சண்முகநாதனை மருத்துவமனையில் நேரில் சென்று ஒருமுறை சந்தித்தார். இந்த நிலையில் அவரின் மரண செய்தி கேட்டதும் நேற்று மாலையே முதல்வர் ஸ்டாலின் சண்முகநாதன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

சண்முகநாதன் ஸ்டாலின்
தனது தந்தைக்கு எல்லாமுமாக இருந்த அவரின் உதவியாளர் சண்முகநாதனின் உடலை பார்த்த முதல்வர் ஸ்டாலின் அங்கேயே உடைந்து போய் கண்ணீர்விட்டார். அவரின் முகத்தையே பார்த்தபடி கண்ணீர்விட்டுக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நின்றார். அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பும் அங்கிருந்து செல்ல மனமின்றி நீண்ட நேரம் கண்ணீர்விட்டபடி நின்றார்.

ஸ்டாலின் அஞ்சலி
பின்னர் அலுவல் பணிக்காக திரும்பியவர் இரவில் மீண்டும் சண்முகநாதனுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். அவரை பிரிய மனமின்றி, துக்கம் தாளாமல் மீண்டும் இரண்டாவது முறையாக மீண்டும் சண்முகநாதன் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்தார். இரவில் அமைச்சர்களோடு வந்த முதல்வர் மீண்டும் சண்முகநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மீண்டும் அஞ்சலி
சண்முகநாதன் இருக்கின்ற இடத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும் என்பது எப்போதும் திமுகவில் பேச்சாக இருக்கும். ஸ்டாலினே அலுவல் நிமித்தமாக அப்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்றால் சண்முகநாதனிடம்தான் தெரிவிக்க வேண்டும். அவர் விட்டால்தான் சந்திப்பே நடக்கும். அப்படி ஒரு உரிமை சண்முகநாதனுக்கு கருணாநிதியிடம் இருந்தது. அப்படி ஒரு மரியாதை சண்முகநாதன் மீது ஸ்டாலினுக்கும் இருந்தது.

பிணைப்பு
அந்த பிணைப்பும், உறவும்தான் சண்முகநாதனை பிரிய மனமின்றி மீண்டும் அவருக்கு அஞ்சலி செலுத்த முதல்வரை தூண்டி இருக்கிறது. அப்பாவோடு இருந்தவர்.. அப்பாவோடு எந்த காலத்திலும் இருந்தவர் என்பதை தாண்டி சண்முகநாதன் அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்தார். இதனால்தான் கண்கள் முழுக்க கண்ணீரோடு நேற்று இரண்டாவது முறையாக மீண்டும் முதல்வர் ஸ்டாலின் சண்முகநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.