'நாட்டுக்கே மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டியவர் முதல்வர் ஸ்டாலின்' .. அமைச்சர் சேகர்பாபு புகழாரம்!
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ECI மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
கொண்டாப்பட்டது. இதில் தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, ஆர் டி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பாதிரியார்கள் முன்னிலையில் கேக் வெட்டிக் கிருஸ்துமஸ் விழா கொண்டாப்பட்டது அப்பகுதியில் உள்ள மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? ஓமிக்ரான் பரவும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

எல்லோருக்கும் சொந்தமான ஆட்சி
தற்போது கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றது. எப்போது ஒரு ஆட்சி விடியல் ஆட்சியாக இருக்கின்றதோ, எப்போது ஒரு ஆட்சியை எல்லோருக்கும் சொந்தமான ஒரு ஆட்சியாக இருக்கின்றதோ அந்த ஆட்சியில் தான் அனைத்து மதத்தினுடைய பெரு விழாக்களும் நடக்கும். அது இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தலை மையப்படுத்தி...
சிறுபான்மையின மக்களின் அரணாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். முதல்வராக பதவியில் இருக்கும்போது மட்டுமல்லாமல், எப்படி பட்ட பதவியாக இருந்தாலும் சரி தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் ஒரே தலைவர் தமிழக முதல்வர்தான். கிறிஸ்மஸ் நிகழ்வு என்பது ஏதாவது ஒரு சூழ்நிலையில் தேர்தலை மையப்படுத்தி தான் நடைபெறும் .தேர்தல் நடந்தால் அந்த ஆண்டிலேயே அந்தக் கட்சிகளின் தலைவர்கள் வெளியிலே வந்து கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பார்கள்

முதல்வர் ஸ்டாலின்
ஆனால் இப்போது முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், திமுகவின் செயல் தலைவராக இருந்தபோதும், சட்டமன்ற கட்சி தலைவராக இருந்தபோதும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தினார். நாம் ஆட்சிக்கு வந்து விட்டோம் இனி மீண்டும் தேர்தல் வரும்போது கிறிஸ்துமஸ் விழா நடத்திக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அனைத்து மக்களுக்காகவும் செயல்படுபவர் ஸ்டாலின்.

மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டியவர்
இதனால்தான் நேற்று தன்னுடைய சொந்த தொகுதியில் 1,500 பேர்களுக்கு தன்னுடைய முயற்சியால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவரையும், ஜெயின் மதத்தை சார்ந்த வரையும், இசுலாமியரையும் ஒருங்கிணைந்து ஒரே மேடையில் அமர வைத்து இந்திய தேசத்திற்கு மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டியவர்தான் முதல்வர் ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர்பாபு பேசினார்.