சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இந்தாண்டில் மட்டும் 221 மீனவர்கள்.." அத்துமீறும் இலங்கை.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மோசமான துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பொதுவாகக் கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்களே மீனவர்களுக்குச் சாவலைத் தரும்.

ஆனால், இதையும் தாண்டி பல நேரங்களில் எல்லை தாண்டி சென்று மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை வீரர்களும் தமிழக மீனவர்கள் கைது செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் பாக். தூதர்.. நடுக்கடலில் இலங்கை தீவிர ரோந்து- ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு! யாழ்ப்பாணத்தில் பாக். தூதர்.. நடுக்கடலில் இலங்கை தீவிர ரோந்து- ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

 இலங்கை கடற்படை

இலங்கை கடற்படை

அப்படித்தான் இன்றைய தினம் புதுக்கோட்டையில் இருந்து தமிழக மீனவர்கள் 3 படகுகளில் வழக்கம் போல மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அந்த மீனவர்கள் தங்கள் படகுகளில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.

 23 மீனவர்கள்

23 மீனவர்கள்

மொத்தம் 23 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் இலங்கை கடற்படையினர் வசம் உள்ளது. இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "28-11-2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவ சமூகத்தினரிடையே கடுமையான மன அழுத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

 105 படகுகள்

105 படகுகள்

ஏற்கனவே நெருக்கடியான பொருளாதாரத்தை எதிர்கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்திற்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டின் 105 மீன்பிடிப் படகுகள் தற்போது இலங்கை வசம் உள்ளன. தொடர் முயற்சிகளின் காரணமாகக் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இன்னும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

 நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவை

எனவே, நமது மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும் தற்போது இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் தேவையான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Cm Stalin wrote letter to Central govt as Tamilnadu fishermen arrested: Nagai fishermen detained by Sri Lankann Navy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X