• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஸ்டாலினுக்கு "தூது" அனுப்பறாராமே.. 8-ல் 2 கன்பார்ம் போலயே.. திமுகவின் டார்கெட் இதுதானா?

Google Oneindia Tamil News

சென்னை: 8 மாஜிக்களுக்கு கட்டம் கட்டியிருக்கிறாராம் ஸ்டாலின்.. இதில் முக்கியமாக 2 பேர் மீதான புகார்களை தூசி தட்டி எடுக்கவும், அதிமுக கலங்கி போயுள்ளது..!

ஆட்சி பொறுப்புக்கு வந்ததுமே, அதிமுகவின் ஊழல் புகார்கள் குறித்து திமுக நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது..

ஆனால், 3 மாதங்களுக்கு முன்பிருந்தே, கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்ததால், அதிலேயே முழு கவனத்தை செலுத்த வேண்டியதாயிற்று.

ஆட்டத்தை தொடங்கியது DVAC.. ஸ்டாலின் கொடுத்த கிரீன் சிக்னல்.. திடீர் ரெய்டு.. களைகட்டும் ஆபரேஷன் AAA! ஆட்டத்தை தொடங்கியது DVAC.. ஸ்டாலின் கொடுத்த கிரீன் சிக்னல்.. திடீர் ரெய்டு.. களைகட்டும் ஆபரேஷன் AAA!

யூடர்ன்

யூடர்ன்

இப்போதுதான் திமுக யூடர்ன் அடித்துள்ளது.. மாஜிக்கள் மீதான வழக்கு விசாரணைகள் வேகமெடுக்கின்றன.. மதுரை, சேலம், புதுக்கோட்டை, விருதுநகர், கோவை, என எட்டுத்திக்கும் 8 பேரை குறி வைத்துள்ளது திமுக.. இதில் ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி பெயர் வலுவாக அடிபட்ட நிலையில், வெள்ளை கொடியை அவர் கையில் எடுத்தும் எதுவும் வேலைக்காகவில்லை.

 வேலுமணி

வேலுமணி

இந்த வாரம் எஸ்பி வேலுமணி மீதான புகார் கிளம்பி உள்ளது.. லிஸ்ட்டில் உள்ள 8 பேரில் மற்றவர்களைவிட்டுவிட்டு, வேலுமணியை முதல்நபராக திமுக குறி வைக்க என்ன காரணம் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.. விரைவில் அடுத்தடுத்த தேர்தல்கள் வரப்போகிறது.. தமிழகத்திலேயே கொங்கு மண்டலத்தில்தான் திமுக அதிக அளவு பலவீனமாக இருப்பதால், அந்த பகுதிகளில் தீவிர கவனத்தை செலுத்தி வருகிறது..

புகார்

புகார்

அதற்காகவே கொங்கு மண்டலத்திலிருந்து மநீம, அமமுக, அதிமுகவில் உள்ள செல்வாக்கான நபர்களை திமுக தன் பக்கம் இழுத்து கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், வேலுமணியை ஊழல் புகாரில் சீனில் கொண்டு வந்துவிட்டால், அது கொங்குவில் அதிமுகவுக்கு வைக்கப்படும் முதல் செக்காக கருதப்படுகிறது.. வழக்கு, கோர்ட், கேஸ் என்று தொடர்ந்து, இந்த புகார்கள் நிரூபணமாகும் பட்சத்தில், கைது நடவடிக்கை கொண்டு வரப்படலாம் என்கிறார்கள்.

சமாதானம்

சமாதானம்

இந்த விஷயம் தெரிந்துதான், வேலுமணி தூது அனுப்ப தொடங்கி உள்ளாராம்.. திமுக சம்பந்தப்பட்ட அந்த நபரை பிடித்து சமாதான பேச்சுக்கு அனுப்பி உள்ளாராம்.. இப்படித்தான் ராஜேந்திரபாலாஜியும், விஜயபாஸ்கரும் ஏற்கனவே முயற்சி செய்ததாக ஒரு தகவல் கசிந்த நிலையில், வேலுமணி அடுத்து என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை..

தீவிரம்

தீவிரம்

வேலுமணி மீதான ஊழல் புகார்களுக்கான ஆதாரமாக விளங்கக் கூடிய முக்கிய ஃபைல்கள் சில காணவில்லை என்கிறார்கள்.. திமுக தரப்பு தொற்றை ஒழிக்க தீவிரமான கவனத்தை செலுத்தி வந்த நிலையில், இப்படி ஒரு தகவல் கசிந்தது. இதற்கு யாராவது உடந்தையாக இருந்திருப்பார்களா? அவர்கள் யார்? என்ற சந்தேகம் உள்ளது.

  Operation AAA ஆரம்பம் | MR Vijayabasakar | IT Raid | Oneindia Tamil
   திமுக புள்ளிகள்

  திமுக புள்ளிகள்

  அடுத்ததாக, வேலுமணியை வெற்றி பெற வைத்ததில் சில திமுக புள்ளிகளே உடந்தையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. இதுபோன்ற கருப்பு ஆடுகளால்தான் கொங்குவில் திமுக சரிவை சந்தித்தது என்ற கோபம், தலைமைக்கு ஏற்கனவே இருந்தது.. அதனால்தான் களையெடுப்பையும் கோவை பகுதியில் நடத்தியது..

  குற்றச்சாட்டு

  குற்றச்சாட்டு

  "வேலுமணி அரசியலை விட்டுச் சென்றாலும், ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டப்படி நிரூபித்து தண்டனை பெற்றுத் தருவேன்" என்று ஸ்டாலின் அன்று உறுதி அளித்திருந்த நிலையில், அந்த புகார்கள் போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுமா? அல்லது தூது நடவடிக்கை ஒர்க் அவுட் ஆகுமா? அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது இதை வைத்து திமுக, கொங்குவில் கொடி நாட்டுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

  English summary
  CM Stalins next action and Whats the main reason for taking the first step on SP Velumani
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X