• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"கிரீன் சிக்னல்.. ஸ்டாலினின் இன்னொரு சக்சஸ்.. மெகா விக்கெட்டை இழக்கும் அமமுக.. பலே அமைச்சர்!

Google Oneindia Tamil News

சென்னை: முக்கிய புள்ளியை தட்டி தூக்க போகிறது திமுக.. மெகா விக்கெட்டை இழக்க போகிறது அமமுக.. இந்த கட்சி தாவலுக்கு திமுக எம்பி பச்சை கொடி காட்டியுள்ளது பெருத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. அதுமட்டுமல்ல, இந்த புள்ளியை திமுக டார்கெட் செய்ய என்ன காரணம்? யார் காரணம்? பின்னணி என்ன என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

தினகரன் ஒதுங்கியே அரசியல் செய்து வருவதால், அமமுக செயலற்று வருகிறது.. இதனால் அந்த கட்சியில் இருந்தும் பலர் திமுகவுக்கு தாவலாம் என்ற செய்திகளும் கிளம்பி வருகின்றன.

கடந்த தேர்தலில் 3வது இடத்தை பிடித்த டிடிவி, இந்த முறை தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டார்.. சீமான் 3வது இடத்துக்கு உயர்ந்துவிட்டார்..

நீட் தேர்வு ரத்துக்கு வழி என்ன? விழிபிதுங்கும் சீனியர் வக்கீல்கள்- தீர்வு காண போராடும் மு.க.ஸ்டாலின்நீட் தேர்வு ரத்துக்கு வழி என்ன? விழிபிதுங்கும் சீனியர் வக்கீல்கள்- தீர்வு காண போராடும் மு.க.ஸ்டாலின்

 வாக்கு வங்கி

வாக்கு வங்கி

அதாவது, தினகரனின் 5 சதவீத வாக்கு வங்கியும், இரண்டரை சதவீதமாக பாதியாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், சசிகலாவின் ஆடியோ ரிலீஸ் விவகாரமும் வெடிக்கவும், அமமுக நிர்வாகிகளே குழம்பி போயுள்ளனர்.. இனிமேலும் தினகரனை நம்பி இருப்பதில் பிரயோஜனம் இல்லை என்ற இறுதி முடிவுக்கும் வந்துள்ளதாக தெரிகிறது.

அதிமுக

அதிமுக

இதனால், பல அமமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இணைந்து வரும் படலம் தொடர்ந்துள்ளது.. அதிலும் திமுகவில் இவர்கள் இணைவது அதிகமாகி உள்ளதாம்.. காரணம், அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி பிரச்சனை அதிகரித்து வருகிறது.. அவர்களுக்குள் நடந்து வரும் பூசலே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.. அதனால், கட்சி எப்படியும் மேலும் 2 ஆக பிரியுமோ, 3ஆக பிரியுமோ என்ற பரவலான சந்தேகமும் உள்ளது.

ஆர்வம்

ஆர்வம்

இதுபோக, எத்தனை மாஜிக்கள், ஊழல் புகார்கள் தொடர்பாக வழக்குகளை சந்திக்க போகிறார்களோ தெரியவில்லை.. இதனால், அதிமுகவின் இமேஜ் மேலும் டேமேஜ் அடையவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அதிமுகவைவிட திமுகவில் பலரும் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.. இதைவிட முக்கியம், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைவரையுமே ஈர்த்து வருவதுதான்.

அய்யப்பன்

அய்யப்பன்

இதன் ஒருபகுதியாகத்தான், அமமுக நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த பரமசிவ அய்யப்பன், தன் ஆதரவாளர்களோடு திமுகவில் சில தினங்களுக்கு முன்பு இணைந்தார்.. அவர் மூலமாக பிற அமமுக தலைவர்களுக்கும் திமுகவில் இணைவார்கள் என்று சொல்லப்பட்டது.. அப்போதே அவர்கள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.. கடைசியில், அவர்தான் அமமுகவின் தூண் பிஆர் பழனியப்பன் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

 செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

முன்னாள் அதிமுக அமைச்சரும் டிடிவி தினகரனின் ஆதரவாளராகவும் அமமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் உள்ள பழனியப்பனை அமமுகவில் இருந்து திமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக ஏற்கனவே அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவித்தன.. இதற்கு காரணம் செந்தில்பாலாஜிதான் என்றும் பரபரக்கப்பட்டது..

சமாளிப்பு

சமாளிப்பு

கடந்த வாரம் முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரை அமமுகவில் இருந்து திமுகவிற்கு அழைத்து வந்ததில் செந்தில் பாலாஜிக்கு முக்கிய பங்கு இருப்பதாக சொல்லப்பட்டது.. அதனால், பழனியப்பனையும் திமுக பக்கம் இழுப்பதில் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு, கட்சியை கைப்பற்றவும், சசிகலாவை சமாளிக்கவும் நேரம் சரியாக இருக்கும்போது, அதிருப்தியாளர்களை சரிகட்டும் முயற்சியில் இறங்காமல் இருக்கிறார்.. இதுதான் திமுகவுக்கு சாதகமாகிவிட்டது என்கிறார்கள்.

முயற்சி

முயற்சி

அதுமட்டுமல்ல, தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கட்சியில் முக்கிய தலைவர்கள் இல்லை என்பதாலேயே பழனியப்பனை திமுக பக்கம் சாய்க்கும் முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது.. ஒருவேளை பழனியப்பன் திமுக பக்கம் வந்தால், இந்த இரு மாவட்டங்கள் மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்துக்கே ஒரு பலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, அப்படி பழனியப்பன் திமுகவுக்கு வந்தால், கொங்குவை சமாளிக்கும் அளவுக்கு ஒரு முக்கிய பதவி கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

பச்சைக்கொடி

பச்சைக்கொடி

பழனியப்பன் திமுக பக்கம் வரப்போகிறாரா என்று செய்தியாளர்கள் தருமபுரி எம்பி செந்தில்குமாரை கேட்டுள்ளனர்.. அதற்கு அவர், திட்டவட்டமாக இந்த விஷயத்தை மறுக்கவில்லை.. மாறாக, "பழனியப்பன் திமுகவுக்கு வந்தால் வரவேற்போம்" என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார்.. இது பழனியப்பனின் கட்சி தாவலை உறுதிப்படுத்தி உள்ளது.. இதனால் அமமுக கூடாரமே ஆடிப்போய் உள்ளது.. முதல் வேலையாக, தினகரன் இந்த நிலையை மாற்றவேண்டும், வீட்டில் முடங்கியிருக்காமல் தொண்டர்களை சந்தித்து அடிக்கடி பேச வேண்டும் என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

English summary
CM Stalins Success and AMMK PR Palaniappan may join in DMK soon, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X