சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூட்டுறவு வங்கி வழக்கு: மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க ஹைகோர்ட் மறுப்பு

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

Google Oneindia Tamil News

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளிவைத்தனர்.

மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதும் இல்லை எனவும், தற்போதைய நிலையில் கூட்டுறவு சங்கங்களின் உரிமைகளில் இந்த அவசர சட்டம் தலையிடுவதாக இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கூறி, தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

Co-operative Bank case: High Court refuses to grant interim injunction

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி, காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி மற்றும் வேலூர் கூட்டுறவு நகர்புற வங்கி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, மற்றும் நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூட்டுறவு சங்கங்கள் சார்பில், மத்திய அரசின் அவசர சட்டமானது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதாகவும் வாதிடப்பட்டது. இந்தியாவில் முதல் முதலாக 1904 ம் ஆண்டு துவங்கப்பட்ட பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி சார்பிலும், வெலூர் கூட்டுறவு நகர்புற வங்கி சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை, மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், அரசியல் சாசனத்தின்படி, நாடாளுமன்றத்திற்கு இதுசம்பந்தமாக சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் வரும் 20ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

கொரோனாவுக்கு நிதியில்லை...ஆனா 2 டெண்டர்கள் இன்று திறப்பு...கனிமொழி ட்வீட்!!கொரோனாவுக்கு நிதியில்லை...ஆனா 2 டெண்டர்கள் இன்று திறப்பு...கனிமொழி ட்வீட்!!

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரித்தது. அப்போது, கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த அவசர சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என வாதிட்டார்.

ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நாடு முழுவதும் 1,937 கூட்டுறவு சங்கங்கள், 7.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கி, வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வங்கியை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக வாதிட்டார். இந்த வாதத்தையே மத்திய அரசு தலைமை வழக்கறிஞரும் முன்வைத்தார்.

இந்த வழக்கில் இடைக்கால தடை கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதன்படி, மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதும் இல்லை எனவும், தற்போதைய நிலையில் கூட்டுறவு சங்கங்களின் உரிமைகளில் இந்த அவசர சட்டம் தலையிடுவதாக இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கூறி, தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

அதேசமயம், கூட்டுறவு சங்கங்களின் உரிமையில் தலையிடுவதாக அவசர சட்டம் இருந்தால் அதுபற்றி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.

English summary
Co-operative Bank case: High Court refuses to grant interim injunction to central government emergency law
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X