சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்லவேளை.. ஊர் பெயர்களை மாற்றினார்கள்.. அதிலும் இந்த 8 பெயரை இத்தனை நாளா மாற்றாததே பெரிய தப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சில வருடங்கள் முன்பு ஒரு பேராசிரியர் வட இந்தியா சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். டெல்லியிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல ரயிலில் டிக்கெட் கேட்டதாகவும், அப்படி ஒரு ஊரே இல்லையே என்று டிக்கெட் கொடுப்பவர் கை விரித்ததாகவும் சொன்னார் அந்த பேராசிரியர்.

அப்புறம்தான், தனது உச்சரிப்பிலுள்ள தவறை புரிந்து கொண்டு, அம்ரிட்சருக்கு (Amritsar) டிக்கெட் கொடுங்க என கேட்டு டிக்கெட் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஊரின் உச்சரிப்பும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதற்கு உதாரணமாக அவர் கூறிய நிகழ்வு இது.

ஆனால் நாம்தான் பாடத்திட்டங்களில் கூட இஷ்டத்திற்கு பெயர்களை மாற்றி வைத்து நிஜ வாழ்க்கையில் சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம். இதற்கு அமிர்தசரஸ் என்று மொழி மாற்றம் செய்தது ஒரு உதாரணம்.

எங்களுக்கு Coimbatore தான் வேணுமுங்க... Koyampuththoor வேண்டாமுங்க- இப்படியும் சில குரல் எங்களுக்கு Coimbatore தான் வேணுமுங்க... Koyampuththoor வேண்டாமுங்க- இப்படியும் சில குரல்

ஊரும், பெயரும்

ஊரும், பெயரும்

ஒரு நபரின் பெயரையும், ஒரு ஊரின் பெயரையும் மாற்ற யாருக்கும் உரிமை கிடையாது என்பார்கள். எனவேதான், எந்த மொழியாக இருந்தாலும், நபரின் பெயரும், ஊரின் பெயரும், ஒரே உச்சரிப்புடன் இருக்கும். தமிழ் பேசுபவர் மட்டுமல்ல, உருது பேசுபவர், சீன மொழி பேசுபவர் என யாராக இருந்தாலும், லண்டன் என்றால் லண்டன் என்றுதான் உச்சரிக்க வேண்டும். டொனால்ட் ட்ரம்ப் என்ற பெயரும் அப்படித்தான். மாற்றவும் கூடாது.

அரசாணை

அரசாணை

தமிழகத்திலும் இப்படி அபத்தமான ஊர் பெயர் உச்சரிப்புகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி மாறி இருந்தன. அதை சரி செய்து, சரியான உச்சரிப்புடன் மாற்றியுள்ளது தமிழக அரசு. நேற்று இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் சில ஊர் பெயர்கள் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டியவை. இத்தனை நாட்களாக அப்படியே விட்டு வைத்ததே தவறு என்ற ரீதியில் உள்ளவை. அது எந்தெந்த ஊர்கள், என்று ஒரு ரவுண்டு பார்ப்போம்.

எக்மோர் அல்ல எழும்பூர்

எக்மோர் அல்ல எழும்பூர்

சென்னையிலிருந்து ஆரம்பிக்கலாம். Egmore என்பது தமிழில் எழும்பூர் என்று அழைக்கப்பட்டது. அப்படியே உச்சரித்தால், எக்மோர். முட்டையும், மோரும் கலந்த ஒரு வகை உணவு அங்கே பிரபலம் போல என்ற நினைப்பு சிறு வயதில் பலருக்கும் இருந்திருக்க கூடும். நல்ல வேளை அது எழும்பூர் என அப்படியே மாற்றப்பட்டுள்ளது. இனி EZHUMBOOR என்று அழைக்கப்படும். எழும்பூர் ரயில் நிலையம் பிரபலமானது என்பதால், ZHU என்றால் ழு என்பது அர்த்தம். சு என்று அர்த்தம் கிடையாது என்ற தமிழ்ப்பாடத்தை இனி பிற மாநில மக்களும் அறிய இது அரிய வாய்ப்பு.

தண்ணீர் கேன் அல்ல, திருவல்லிக்கேணி

தண்ணீர் கேன் அல்ல, திருவல்லிக்கேணி

திருவல்லிக்கேணிக்கும், ட்ரிப்ளிகேனுக்கும் ஏதாவது தொடர்பு இருந்தது. ஏதோ தண்ணீர்கேன் போல அந்த இடம் அழைக்கப்பட்டது. இனி அது, THIRUVALLIKKENI. இப்படித்தான் தண்டையார் பேட்டை எங்கே இருக்கு, Tondiyarpet எங்கே இருக்கு. அது என்ன தொண்டியார்பேட்? இனி அது, THANDAIYAARPETTAI என்று அன்போடு அழைக்கப்படும். PURASAWALKAM என்ற ஆங்கில பெயரில், wal எதற்கு வருகிறது? வால் என்று அர்த்தமாகுமே என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இனி அது, PURASAIVAAKKAM.

English summary
Tamil nadu city new names is much needed one, especially for Coimbatore and many areas in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X