• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கோவை, கடலூர், சேலத்தில் கொரோனா விஸ்வரூபம்! சென்னைக்கு அடுத்ததாக அதிக பாதிப்பு

|

சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 1025 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஒரேநாளில் 579 பேருக்கும் கடலூரில் 403; சேலத்தில் 405 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது.

Coimbatore Records 579 new Positivies for Coronavirus

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தமிழகத்தைவிட அதிகம். சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு- டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 5,891

கோவையிலும் கொரோனா பாதிப்பு 500 ஐ தாண்டியதாகவே உள்ளது. தற்போது கடலூர், சேலத்திலும் கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டி உள்ளது.

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 43
  • செங்கல்பட்டு 390
  • சென்னை- 1025
  • கோவை- 579
  • கடலூர்- 405
  • தருமபுரி- 54
  • திண்டுக்கல் - 136
  • ஈரோடு - 106
  • கள்ளக்குறிச்சி- 54
  • காஞ்சிபுரம் - 136
  • கன்னியாகுமரி - 111
  • கரூர்- 64
  • கிருஷ்ணகிரி- 49
  • மதுரை- 123
  • நாகப்பட்டினம் - 71
  • நாமக்கல் - 83
  • நீலகிரி - 14
  • பெரம்பலூர்- 10
  • புதுக்கோட்டை- 76
  • ராமநாதபுரம்- 57
  • ராணிப்பேட்டை- 98
  • சேலம் - 403
  • சிவகங்கை - 25
  • தென்காசி - 82
  • தஞ்சாவூர்- 147
  • தேனி- 95
  • திருப்பத்தூர்- 94
  • திருவள்ளூர்- 285
  • திருவண்ணாமலை- 213
  • திருவாரூர் - 133
  • தூத்துக்குடி- 57
  • நெல்லை- 110
  • திருப்பூர்- 87
  • திருச்சி - 120
  • வேலூர்- 159
  • விழுப்புரம்- 224
  • விருதுநகர்- 62

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chennai 1025; Coimbatore 579 Positivies for Corona on Wednesday. Here is the District wise abstract of Coronavirus cases on today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X