சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொள்ளாச்சி சர்ச்சை.. கோவை எஸ்பி பாண்டியராஜன் உள்பட 3 காவல் துறை அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்!

Google Oneindia Tamil News

சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக புதிய எஸ்பி சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் மீண்டும் மீண்டும் உறவு வைத்துக் கொள்வதையுமே தொழிலாக வைத்திருந்த திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் முகத்திரையை பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு பெண் வெளியே கொண்டு வந்தார். அதாவது இந்த 4 பேரும் இந்த பெண்ணுடன் நண்பர்கள் போல் பழகி தனியே அழைத்து சென்று காரில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.

4 பேர் கைது

4 பேர் கைது

இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டதால் அவரை அந்த 4 பேரும் சேர்ந்து கீழே தள்ளிவிட்டனர். இதையடுத்து அந்த பெண்ணின் புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகள் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வேலூர் அருகே ஷாக்.. வார்டு பெயர் எழுதப்பட்ட மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம்.. சிக்கும் பிரபலம் யார்?வேலூர் அருகே ஷாக்.. வார்டு பெயர் எழுதப்பட்ட மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம்.. சிக்கும் பிரபலம் யார்?

எஸ்பிக்கு கண்டனம்

எஸ்பிக்கு கண்டனம்

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி பாண்டியராஜன் பொள்ளாச்சி சம்பவத்தை விளக்கிய போது பெண்ணின் பெயரை பொதுவெளியில் வெளியிட்டார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் எஸ்பிக்கு எதிராக கண்டனத்தை எழுப்பினர்.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

இந்தநிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வெளியிடப்பட்ட அரசிதழில் அந்த பெண்ணின் பெயரை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டார். இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கோவை எஸ்பி

கோவை எஸ்பி

அந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், கோவை எஸ்பி பாண்டியராஜன் மீதும் கோவை ஆணையர் பெரியய்யா மீதும் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என பதில் அளித்தார்.

புதிய எஸ்பி நியமனம்

புதிய எஸ்பி நியமனம்

இந்த நிலையில் எஸ்பி பாண்டியராஜனை இடமாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காத்திருப்போர் பட்டியலில் பாண்டியராஜன் வைக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்துக்கு புதிய எஸ்பியாக சுஜித்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யார் மாற்றம்

யார் மாற்றம்

பொள்ளாச்சி விவகாரத்தில் கோவை எஸ்பி பாண்டியராஜன், கோவை டிஎஸ்பி ஜெயராமன், பொள்ளாச்சி கிழக்கு ஆய்வாளர் நடேசன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாண்டியராஜனுக்கு பதில் சுஜித்குமாரும், டிஎஸ்பி ஜெயராமனுக்கு பதிலாக சிவக்குமாரும், ஆய்வாளர் நடேசனுக்கு பதிலாக வெங்கட்ராமனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Pollachi Rape incident: Coimbatore SP Pandiyarajan gets transferred.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X