சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து இல்லை.. தேவையெனில் சிறப்பு தேர்வுக்கு ஓகே- யூஜிசி பிரமாணப்பத்திரம்

Google Oneindia Tamil News

சென்னை: இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்று, பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

2020ம் ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை கட்டாயமாக நடத்த வேண்டும் என்ற யு.ஜி.சியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி
31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே மகன், ஆதித்ய தாக்ரேவும் ஒருவராகும்.

இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தபோது, யு.ஜி.சி தனது பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது. இதன் மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கையில் 2ம் இடத்தில் தமிழகம்; நோயாளிகள் எண்ணிக்கையில் 4-வது இடம்கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கையில் 2ம் இடத்தில் தமிழகம்; நோயாளிகள் எண்ணிக்கையில் 4-வது இடம்

பாதிப்பு

பாதிப்பு

இறுதியாண்டு தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்று யூஜிசி தெரிவித்துள்ளது. மேலும், செப்டம்பருக்குள் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, பிறகு சிறப்பு தேர்வு நடத்துவது குறித்து கூட பரிசீலிக்கலாம்.

மாநிலங்கள்

மாநிலங்கள்

மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் யுஜி / பிஜி மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளன. இறுதி ஆண்டு / செமஸ்டர் தேர்வுகளை எழுதாமல் பட்டம் வழங்குவது யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் முரணானது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

செப்டம்பர் இறுதிக்குள் செமஸ்டர் அல்லது இறுதி ஆண்டு தேர்வை நடத்த அனைத்து பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் கடமைப்பட்டுள்ளன. இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது. இந்த பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றம் ஏற்குமா இல்லையா என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாளை வழக்கு விசாரணைக்கு வரும்போது, அதுகுறித்து தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல மாநிலங்களின் முதல்வர்களும், தேர்வை ரத்து செய்ய வற்புறுத்தி வருகிறார்கள். இதுபற்றி மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்ட ட்வீட்களில், எந்தவொரு கல்வி மாடலிலும் மதிப்பீடு மிக முக்கியமான மைல்கற்களில் ஒன்றாகும். தேர்வுகளை நடத்துவதுதான் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் திருப்தியையும் தருகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகளுக்கு வரமுடியாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
The University Grants Commission (UGC) has filed an affidavit in the Supreme Court that the final year semester exams will not be canceled. It has allowed universities to conduct special exams when feasible for students who cannot appear for the term-end exams in September.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X