சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உணர்ச்சிவசப்பட்டு.. கோபத்துல பேசிட்டேன்.. பெரிசு படுத்தாதீங்க.. கலெக்டர் பொன்னையா வருத்தம்

கலெக்டர் பொன்னையா வருத்தம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் முன்னிலையில் ஆவேசமான கலெக்டர்!-வீடியோ

    சென்னை: "பாதுகாப்பு பணியில் குளறுபடி இருந்ததால் கோபப்பட்டுவிட்டேன்" என்று இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    2 தினங்களுக்கு முன்பு, இன்ஸ்பெக்டர் ஒருவர் பாஸ் இல்லாமல் ஒருசிலரை அத்திவரதர் தரிசனத்துக்கு உள்ளே அழைத்து சென்றதாக தெரிகிறது. இதை நேரடியாக பார்த்துவிட்ட மாவட்ட கலெக்டர் பொன்னையா, இன்ஸ்பெக்டரை லெப்ட் & ரைட் வாங்கிவிட்டார்.

    "எந்த ஸ்டேஷன் நீ.. பித்தலாட்டம் பண்ணவா வந்தே? தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.. ஐஜி நம்பர் எங்கேப்பா.. என்னத்த நீ செக் பண்ணி அனுப்பறே.. பாஸ் இல்லாம அங்கே அவ்ளோ பேர் உட்கார்ந்திட்டு இருக்காங்க. என்னய்யா செக் பண்றே?

    மிரட்டி மிரட்டியே.. 12 முதல் 16 வயசு சிறுமிகளை சீரழித்த ஆதிசிவன்.. தனியார் காப்பகத்தில் அக்கிரமம்! மிரட்டி மிரட்டியே.. 12 முதல் 16 வயசு சிறுமிகளை சீரழித்த ஆதிசிவன்.. தனியார் காப்பகத்தில் அக்கிரமம்!

    ஆவேசம்

    ஆவேசம்

    இரு வரேன்.. உன்னை சஸ்பெண்ட் பண்ணாதான் சரியா வரும். திமிர்தனமா பண்றீங்க போலீஸ்காரங்க எல்லாம். என்ன ஸாரி.. யோவ்.. அங்க எத்தனை பேர் நிக்கறாங்க பாத்தியா? நீ இங்கதான்டா நிக்கறே? ஐஜியை வரசொல்லுய்யா.. ஐஜிக்கிட்ட நான் பேசறேன். இன்னைக்கு நீ சஸ்பெண்ட் ஆகறே.." என்று ஆவேசமாக சொன்னார்.

    இன்ஸ்பெக்டர்

    இன்ஸ்பெக்டர்

    பொதுமக்கள் முன்னிலையிலேயே கலெக்டர் இன்ஸ்பெக்டரை திட்டியதும், ஒருமையில் பேசியதும் வீடியோவாக வெளிவந்து இணையத்தில் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனால் அந்த இன்ஸ்பெக்டர் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். என்ன இருந்தாலும், கலெக்டர் இப்படி ஒருமையில் பேசியிருக்க கூடாது என்றுதான் பரவலாக மக்களிடம் பேச்சு எழுந்தது.

    விளக்கம்

    விளக்கம்

    எத்தனையோ மன மற்றும் உடல் சுமைகளையும் தாங்கி கொண்டு இரவு பகலாக டியூட்டி பார்த்து வரும் போலீசாரை இப்படி பொது இடத்தில் பேசலாமா என்று கேட்டு, பாதுகாப்பு பணிகளுக்கு செல்லாமல் எதிர்ப்பை காட்டவும் சில போலீசார் முயன்றனர். இந்நிலையில், இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டியதற்காக பொன்னையா விளக்கம் அளித்துள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:

    ஒரே குடும்பம்

    ஒரே குடும்பம்

    "பாதுகாப்பு பணியில் போலீசார் மிகச்சிறப்பாக செயல்படுகின்றனர். நாங்கள் ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். ஆனால் அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் குளறுபடி இருந்ததால் கோபப்பட்டுவிட்டேன். உணர்ச்சிவசத்தால் பேசிய வார்த்தைகளை பெரிதுப்படுத்த வேண்டாம்" என்று இன்ஸ்பெக்டரை பேசியதற்கு வருத்தம் தெரிவித்து, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    English summary
    Kancheepuram District Collector Ponnaiya says his apologize for his non honorable behavior
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X